தோல்வியும் வெற்றியும்

இரவின் தோல்வி
பகலின் வெற்றி.
பகலின் தோல்வி
இரவின் வெற்றி.
மழையின் தோல்வி
வெயிலின் வெற்றி.
வெயிலின் தோல்வி
மழையின் வெற்றி.
வளமையின் தோல்வி
வறுமையின் வெற்றி
வறுமையின் தோல்வி
வளமையின் வெற்றி.
.
மெய்யின் தோல்வி.
பொய்யின் வெற்றி.
பொய்யின் தோல்வி
மெய்யின் வெற்றி.
எனது தோல்வி
உனது வெற்றி
உனது தோல்வி
எனது வெற்றி.
காலநிலை நிரந்தரம் இல்லை.
பருவகாலம் நிரந்தரம் இல்லை.
தோல்விகள் நிரந்தரம் இல்லை.
வெற்றிகள் நிரந்தரம் இல்லை.