வலி, நினைவா வலிக்குள் ஊடுரவும் வலி, நினைவா

வலி, நினைவா? வலிக்குள் ஊடுரவும் வலி, நினைவா ? (கதை கதையாம் கவிதை)
======================================

எதையாவது ரொம்ப ஆசைப்படும்போது
அதை இப்போது வைத்திருக்கிறவர்
சந்தோசமாகத்தான் இருக்கிறாரா?
என்று நிச்சயப்‌படுத்திக் கொள்ளுங்கள்

கண்ணதாசன்

கிணற்றடியில் தவளை சத்தத்துடன்
ஒரு இரவு களிமண் பொம்மை செய்துக் கொண்டிருப்பது என்பது எத்தகைய
மனப்போக்கு? இது ஊகிப்பல்ல
பலக்காலமும் பழகிப் போன ஒன்று
இடை உறக்கம் கலைந்து எழும்போதெல்லாம்
களிமண் தட்டும் சத்தத்துடன் இணைப்போடுகிறது தவளையின் ரீங்காரம்
இந்த ஓசை சிலநேரம் ஒரு கட்டிலின்பத்தின்
ஓசையெனவும் செவிக்கெடச் செய்கிறது
என்றால் உங்களால் மறுக்க முடியுமா?

இந்த ஓசைக்கொரு கவிதை இருக்கு

வலிக்குள் வலி ஊடுருவினால் வலி தெரிவதில்லை என்னும் உண்மை
தெரியுமா ?

வலி, நினைவா? வலிக்குள் ஊடுரவும் வலி, நினைவா ? ம் .

எதற்காக இந்த ஜென்மம்

பிறப்பித்து, வடிவு கொடுத்து, காற்றடைத்து, தயக்கம் ‌கொடுத்து தயக்கத்திற்கொரு
மொழி கொடுத்து மொழிக்கொரு அசைவுக்
கொடுத்து அசைவில் கனவு நிகழ்த்தி‌
கனவில் ஆசை கொடுத்து ஆசையில்‌ இன்பம் கொடுத்து இன்பத்தில்‌ ஈரம் படரி,
ஈரம் உலர்வு‌ தொட இயற்கை பூக்கள் உற
நீண்டதொரு கார் இரவு கொடுத்து..
இரவில் நிலவை ஏங்கும் கண்கள் கொடுத்து, கண்களோ நீரைக் கொடுத்து, நிரோ நினைவைக் கொடுத்து, நினைவுதான்
யாரைக் கொடுத்தது?
நிலவாவது காற்றை கொடுத்தது என்றுப் பார்த்தால் காற்று உணர்வைக் கொடுத்தது
உணர்வு வலியைக் கொடுத்தது,
வலிதான் உறக்கம் கெடுத்தது

இதுதான் வாழ்க்கை என்று தீர்மானம் செய்துதான் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் மனிதர்கள்
வாழ்க்கைக்கொரு கூடு வேண்டும்
கூடு ஏன் வேண்டும்? அதுதான்
வாழ்க்கையின் ஆதாரம் அப்படித்தானே.
ஆம் அப்படித்தான். ஆடை எப்படி
மானத்திற்கு அடையாளமோ
அப்படித்தான் உயிர் வசிக்கக் கூடும்
அவசியப்படுகிறது.
ஆடையற்ற காலத்தில் கூடென்று ஒன்று அவசியப் பட்டதில்லை. அப்பொழுதெல்லாம்
உருவத்தில் மட்டும்தான் மிருகமாகியிருந்தோம்.
இப்பொழுது உருகண்டபோதெல்லாம் மிருகமாயிருக்கிறோம் ..
வித்தியாசமில்லை..

சத்தியமும் அப்படித்தான்

ஆண்களின் சத்தியங்களைவிட ஒருப் பெண்ணின் சத்திய சந்ததையை இப்படி
சொல்கிறேன் ‌.

"ஒரு சத்தியத்திற்குக் கட்டுப்படுகிறாள்
ஏன்?
சத்தியம் தான் நம்பிக்கையின்
ஆதிநாதம்
கணவனானதும் நான்
உன்னிடம் ஒரு சத்தியத்தை பெருகிறேன்.
உன்னை இங்கு உன்னிலிருந்து பிடுங்கி
வதைக்குள்ளாக்குகிறேன்.
தினமும்
என் தீ நாக்குகள் உன்னைப் பொசுக்குகின்றன.
உன் மானத்தை கேள்விகேட்கின்றன.
முதல் நாள் குடித்துவிட்டு வந்து அடிக்கிறேன்
மறுநாள்
உன்னிடம் மன்னிப்புக் கேட்க துடிக்கிறேன்
நம் செல்வங்களின் மூலம்
தூதுவிடுகிறேன்
உன்னிடம் அதிகம் தகைமை இருப்பதை
நான் அறிவேன்
என்னைப் பிரிய யோசிப்பாய்
நானில்லாமல் போனால்
கதியற்றுப் போவதாய் யோசிக்கிறாய்.
அவரில்லாமல்
என் பிள்ளைகளைக் கொண்டு எப்படி வாழுவேன்
எனச் சொல்லி நிந்திப்பாய்
நான் உன்மேல்
அதிகம் பிரியம் வைத்திருப்பதாய் நம்புகிறாய்.
ஆதலாலோ என்னவோ
வலிப் பொறுத்துக் கொள்ளுகிறாய்.

மறு இரவு
இன்னும் அதிகமாகக் குடித்திருக்கிறேன்
என் பேச்சும் நடத்தையும்
நேற்றையதைவிட மேலும் மோசமாக இருநநது.
இன்று உன்னை
பிழிந்து செவுற்றில் தூக்கி அறைந்தேன்
நீ வலியில் துடிதுடித்துப்
போனாய்
அதைப் பற்றி நான்
கண்டு கொள்வதாய் இல்லை
விடிந்ததும்
அதே பிரியம் மாறாமல் இருக்கிறேன்
எழமுடியாமலிருக்கும் உன்னைக் கண்டு
குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன்
மனம் இறுகி
கண்ணீர் வருவதை மறைக்கிறேன்
மீண்டும் நம் மலர்களை தூதனுப்பி
உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்

இன்று இரவு என் உச்சக்கட்ட கோபத்தின் தாக்குதலால்
நீ உயிரிழந்து விட்டாய்
ஆம்
இன்று உன் இறுதிச் சடங்குக்கான நாள்
உன்னை நம் வீட்டின் நடுப்புறத்தில்
கிடத்தியிருந்தார்கள்
நீரூற்றி பூசாற்றி அழகு படுத்தி இருந்தார்கள்
நம் மலர்கள் அழுகின்றனர்.
எப்போதுமில்லாமல்
நீ அழகாகியிருக்கிறாய்
நான் உன்னையேப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

நீ உயிரிழப்பாய் என்று அறிந்திருந்தால்
உன்னை செல்லமாக அடிக்கக்கூட
கை எடுக்காமல் இருந்திருப்பேன்போல்

பூப்போல் இருந்த உன்னை
பூக்களின் நடுவில் இரையாக்கியிருக்க மாட்டேன்போல்

ஒவ்வொரு முறை
உன்னை அடிக்கும்போதும்
துன்புறுத்தும் போதும்
கதறியழுது
தலையடித்துக் கொண்டு
உன்னைதானே நம்பி வந்தேன்
உனக்காக மட்டும் தானே வாழ்ந்திருந்தேன்
என்று அடிக்கடிக் கேட்பதைப்போலவே
இதோ இப்போதும்
உன்னால் தானே உயிர்நீத்துக் கிடக்கிறேன்
என்று
உன் மூடிய கண்கள் கேட்கின்றன

நீ இல்லாமல் இனி நம் செல்வங்களை
எப்படி கரைசேர்ப்பேன் ""

இது ஒரு உணர்வு

ஒரு பெண்ணின்‌
தீர்மானம் ஒன்றுதான் உறுதி, தீர்மானம்
தான் வைராக்கியம் .. இந்த தீர்மானம்
எதற்காய் எடுக்கப்படுகிறதோ
அது ஒருக் கட்டத்தில் அவள் தன்மானத்தை
முதல் முறை
வீதி நிறுத்தும்போது
அந்த தீர்மானம் தளர்வுறுகிறதா ?
இல்லை. ஏன் என் என்றால்
அவள் தீர்மானத்திற்கென்றொரு கெளரவம் இருக்கும் இதை‌நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தன்மானம் முழுமையாய்
உடைப்படும் போது தீர்மானம்
ஒருநாள் தளரும் ..

யாருக்காய், எதற்காய் என்பதில் தொடங்கி
எதற்கோ என்றாகி ஏன்தான் வாழ்கிறோம்
எனனும்
ஊசிநுழைக்கும் கேள்விகளுக்கிடையில்
உறக்கம் தொலைக்கும்
ஏதோ ஒரு ஓசை
அவசியப் பட்டுதான் போகிறது
முதலில்
அப்படிப்பட்ட ஒரு ஓசைக்குள் நினைவிழக்கிறாள்.
பிறகு அந்த ஓசையின் வழியாக
வலியின் நினைவுகளை
உடலெங்கும் உட்செலுத்துகிறாள்.

நட் இரவில்
நன்கு பழுதுப் பார்க்கப் படாத காற்றாடியின்
தோய்ந்த ஓசைக்கு நடுவில்

வலி, நினைவா? வலிக்குள் ஊடுரவும் வலி, நினைவா ? ம் .

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராக (30-Oct-22, 5:17 am)
பார்வை : 51

மேலே