இரண்டும் இருட்டு

"இ)ண்டும் இருட்டு"னு அடிக்கடி சொல்லிட்டு இருக்கிறாயே, என்னடா ஆச்சு தம்பி?
@@###
நான் என்னத்த அக்கா சொல்லுவேன். (இ)ரண்டும் இருட்டு தான்.
@@@@@@@
ஏன்டா முத்தையா, எந்த (இ)ரண்டைச் சொல்லற?
#########
என் பேத்திங்க (இ)ரண்டும் பேரையும் பத்தித் தான் சொல்லறேன்.
@@@@@@
அவுங்களுக்கு என்னடா குறை முத்தையா? நல்லா அழகா இருக்குறாங்க. செக்கச் செவப்பா இருக்கிறாங்க.
@@@@@@
(இ)ரண்டும் இருட்டு தான் அக்கா.
@@@@@@@@
என்னடா முத்தையா, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருக்கிறயே?
@@@###
என் பேத்திங்க பேரு உனக்குத் தெரியுமா அக்கா?
@@@@@#@
ஓ... தெரியுமே! மூத்தவ நிசா (நிஷா). இளையவ தமசி‌.
@@@@@@@
(இ)ரண்டுமே இருட்டு தான்.
#@@@@@@@@
என்னடா முத்தையா. நீ சொல்லறது ஒன்னுமே புரியல. .
@@@@#@
அக்கா என் பேத்திங்க பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?
@@###@#@
நான் என்னத்தக் கண்டேன். நீயே சொல்லுடா.
@@@##@@
(இ)ரண்டுமே "இருட்டு" தான்.
########@
அடக் கடவுளே (இ)ரண்டு குழந்தைங்க பேருக்கும் அர்த்தம் 'இருட்டு'. என்ன அநியாயம்டா‌. வளர்ற பிள்ளைகளுக்கு 'இருட்டு'னா பேரு வைக்கிறது. போடா, மகனும் மருமகளும் வச்ச இருட்டும் பேருங்களைத் தூக்கிக் குப்பையிலே போட்டுட்டு தமிழ்ப் பேருங்களை வைக்கப் சொல்லுடா முத்தையா.
@@@#@#@@
நாம் சொன்னா எதைக் கேட்கிறாங்க. விடுக்கா.
@##########@@@@@@@@@############
Nisha = Night
Tamasi = Night
Indian origin. Female names

எழுதியவர் : மலர் (25-Dec-22, 3:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 99

மேலே