ஒருவனையே மணப்போம்
என்னடி சொல்லுறீங்க? இரண்டு பேரும் ஒருத்தனையே கல்யாணம் பண்ணிக்கனும்னு அடம் பிடிக்கிறீங்க? நீங்க இரண்டு பேரும் ஒருத்தனையே காதலிக்கிறதா சொன்னீங்க. அந்தப் பையனும் உங்க இரண்டு பேரின் காதலையும் ஏத்துகிட்டதா வேற சொல்லறீங்க? நீங்க இரட்டைப் பிறவிகள். அதுக்காக ஒருத்தனையே கல்யாணம் பண்ணிக்க முடியுமா? இது சட்ட விரோதம் இல்லையா? இதைப் பார்த்து உலகம் கைகொட்டி சிரிக்குமே!
#@@#@@
அம்மா, அதைப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் இரட்டைப் பிறவிகள். எங்கள் தோற்றம், அழகு, சிந்தனை, செயல் எல்லாம் ஒரே மாதிரி இருக்குது.
#@@@
ஏன்டி நீங்கள் திருமண நிகழ்ச்சியில் தாலி கட்டுவதற்கு முன்பே கைதாகி வாய்ப்பு இருக்குதே, என்னடி செய்வீங்க?
@@####
கைது பண்ணட்டும். கவலை இல்லை. நாங்கள் மூணு பேருமே வருமான வரி கட்டறவங்க. தனியார் துறையில் உயர் பதவியில் இருக்கிறவங்க. எங்களுக்கு சிறைச்சாலையில் முதல் வகுப்பு கிடைக்கும். எங்க மூணு பேருக்கும் சிறையில் முதல் வகுப்பில் பக்கம் பக்கமா உள்ள இரண்டு அறைகளை ஒதுக்கச் சொல்லுவோம். அது இயலாது எனில் ஒரு அறையே போதும். சிறைச்சாலையில் இருந்தே நாங்கள் பார்க்கும் பணியைத் தொடர்ந்து செய்ய அனுமதி கேட்போம். நாங்கள் நன்னடத்தை உள்ளவர்கள். எனவே வாரத்தில் ஒருநாள் நாங்கள் மூவரும் வெளியில் சென்று வர அனுமதி கோருவோம்.
உம். இதெல்லாம் நடக்குமா?