RAJMOHAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : RAJMOHAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 12 |
கபடி ஆடுது ..
கடந்த காலம் தேவருக்கு
மறக்க நினச்ச தெல்லாம்
முண்டிக்கிட்டு வருது
மழை போல கண்ணீர் -ஏனோ
முட்டிகிட்டு வருது
அழுது பழக்கமில்ல
ஆம்பளைக்கு ....
அத்தனையையும் மீறி
அந்து விழுது கண்ணீர் துளி ரெண்டு
மறக்க நினைச்சது எல்லாம் -மனச விட்டு
துறக்க நினைச்சது எல்லாம்
மண்டுது மனசுக்குள்ள
மண்குழில மழைநீரா!
தூரப்போ! னு தூக்கி எரிஞ்சு பாத்தாலும்
ஊறப் போட்ட கள்ளா!
உள்ளார பொங்குது
மொக்கையா மூளையில
முடிஞ்சு வச்ச நினைவுகள்
முகம் காட்டுது ஒவ்வொண்ணா...
ஊருல பெரிய சாவு
பேருல பெரிய பேறு
பெரியகருப்பு தேவரு
பெத்த மகனா...
ஒத்த மகனா..
மொக்கையா முந்தி நிக்கையிலே....
வரப்ப உடைகிறான்
வெரெப்பா நிக்குறான்
வளர்ந்தும் வளராத
வளத்தகெடா மீசைய
வருடித் தடவிகிட்டு
வம்புக்கு இழுக்கிறான்
குன்னிமுத்து......
பங்காளி சேக்காளி னு
பத்து பேர் படைசூழ
படமெடுத்து நிக்குறான்
குன்னிமுத்து....
ஒத்த பனமரம் தான்
உசரத்துல!
கலருல...
காக்காவையும் கரியையும்
கடைஞ்செடுத்த கடும் கருப்பு -பயல
வெயில்லையும் விளக்கு புடிச்சுத்தான் தேடனும்.
எரியுற எண்ணையில தண்ணியா
எரிஞ்சு விழுகுற முகத்துல
எடம் இல்ல உணர்ச்சி எதுக்கும்
அடுத்தவன் கண்ணீருக்கு
அழணும்ங்கிறது-இவன்
அகராதிலேயே இல்ல
சிறுக்கி மகன்
சிரிப்ப பாத்தே பலநாள் ஆச்சு
குன்னிமுத்து
பேரக்கேட்டாலே
படபடக்
வானம் கருத்து மழை கொட்ட தொடங்கிருச்சு
வாரேன்னு சூரியனும் மேற்கால கிளம்பிருச்சு
இரை தேடித் போன பறவையெல்லாம்
இறங்கிருச்சு கிளைமேல
ஒத்த சனம் இல்லாம
ஒடுங்கிருச்சு வீதி எல்லாம்
‘வா’ன்னு சொன்னாலும் வராத சத்தத்துல
‘ஓ’ னு ஒப்பாரி வச்சு
ஒன்டியப்பன் வீதி வழி
ஓடி வாறா பொன்னாத்தா......
யப்பே! யாத்தே! னு
ஆடி அலகளிஞ்சி...
அழிஞ்ச கோலமா ...
அலங்கோலமா...
அவுந்த கொண்டையா....
நிக்குறா பொன்னாத்தா.
எந்த காட்டுப் பயலுக்கு
என்ன கொடுத்த சொல்லு அப்பு?
சாமத்துக்கும் அடிக்கிறான்
சாராயம் குடிச்சு புட்டு
சங்கிலேயே மிதிக்கிறான்
நித்தம் குடிக்கும் நீச்ச தண்ணீக்கு
நித்தம் செத்து ...
நிம்
வேலி தாண்டா வெள்ளாடா
வளந்து நின்னா பொம்மியக்கா
வீடுதெளிச்சு வாசல் மொழுகி
காடு கழனியெல்லாம் கட்டு சுமந்து
தேடித் தேடி ஓடிக் கலைச்சு
ஓடி ஓடிப் போகுது
ஒவ்வொரு பொம்பள வாழ்க்கையும்
வாழ்கைக்கு இதுக்கு
வாக்கப்பட வேண்டாமுன்னு
பள்ளிக்கூடம் போனா பொம்மியக்கா
நாலும் நாலும் எட்டுனா
நமக்கு எட்டாத படிப்பு எதுக்குன்னு
நாசூக்கா ஒதுங்கிகிட்டா பொம்மியக்கா
அம்மி மிதிக்க
ஆடு மேய்க்க
இரை எடுக்கும் கோழிக்கு காவல் காக்க
ஈரம் உலர சாணி மிதிக்க
உக்காந்து சோவி உருட்ட
ஊர் சுத்த
ஐய்தமகன் கத பேசும் குமரி பொண்ணுகளோட கொட்டம் அடிக்க
ஒளிந்து விளையாட
ஓடக்கரையில ஓணான் பிடிக்க
ஔவை பாட்டி தம
என் காதலியை வர்ணிக்க
புலவருகளுக்கு ஒரு அழைப்பு
பல
நாட்களுக்கு பிறகு
புலவர்களின் பதிலுரை
ஒருவர்
அவளை மலர்களுடன் ஒப்பிட்டேன்
மலர்கள் போட்ட போட்டி
என்னால் முடியாது..
மற்றொருவர்
மலைகளுடன் ஒப்பிட்டால்
அவளை காண்பதற்கு
உயர்ந்துக்கொண்டே செல்கிறது
சரி
நிலவுடன் ஒப்பிடமென்றால்
நட்சத்திரங்கள் வேகமாக
கீழே இறங்கி வருகிறது
சூரியனோ
மலைநேரம் வந்தும்
போக மாறுகிறது இறைவன் கோபத்தில்
என்னை விட்டு விடுங்கள்
மூன்றாவது நபர்
நான் கடலுடன் ஒப்பிட்டு பார்த்தால்
என்ன வரணித்தேன் அவ்வளவுதான்
கடல்
அதன் எல்லை மீற
ஆரமித்தது சுனாமி அலைகள்
வந்துவிடுமோ! என்ற அச்சத்தில்
ஓடி வந்துவிட்