பொம்மியக்கா -அத்தியாயம் 4

வேலி தாண்டா வெள்ளாடா
வளந்து நின்னா பொம்மியக்கா

வீடுதெளிச்சு வாசல் மொழுகி
காடு கழனியெல்லாம் கட்டு சுமந்து
தேடித் தேடி ஓடிக் கலைச்சு
ஓடி ஓடிப் போகுது
ஒவ்வொரு பொம்பள வாழ்க்கையும்

வாழ்கைக்கு இதுக்கு
வாக்கப்பட வேண்டாமுன்னு
பள்ளிக்கூடம் போனா பொம்மியக்கா
நாலும் நாலும் எட்டுனா
நமக்கு எட்டாத படிப்பு எதுக்குன்னு
நாசூக்கா ஒதுங்கிகிட்டா பொம்மியக்கா

அம்மி மிதிக்க
ஆடு மேய்க்க
இரை எடுக்கும் கோழிக்கு காவல் காக்க
ஈரம் உலர சாணி மிதிக்க
உக்காந்து சோவி உருட்ட
ஊர் சுத்த
ஐய்தமகன் கத பேசும் குமரி பொண்ணுகளோட கொட்டம் அடிக்க
ஒளிந்து விளையாட
ஓடக்கரையில ஓணான் பிடிக்க
ஔவை பாட்டி தமிழோட ஒடுங்குனது மாதிரி
மண்ணோட கலந்துகிட்டா பொம்மியக்கா

வயல் வரப்பில் விளையாடி தெரியுறா
ஊர் குருவியோடு உக்காந்து பேசுறா
பச்சோந்தி நண்டும் சிண்டும்-இவ
பாட்டுக்கு பாவன காட்டுது

மழைய “வா” னா
கூப்பிட குரலுக்கு குழந்தையா
கூடவே வருது

சிறுக்கி மகளுக்கு
சீமயிலயிருந்து ராசாக்க வந்து
சீர் வரிசை செஞ்சு கூடி போவான்னு
ஊர் பேசுது

எழுதியவர் : (26-May-21, 4:30 pm)
சேர்த்தது : RAJMOHAN
பார்வை : 17

மேலே