RBarathy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RBarathy
இடம்:  இலங்கை, யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  17-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2020
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  6

என்னைப் பற்றி...

கவிதை எழுத்தாளர்

என் படைப்புகள்
RBarathy செய்திகள்
RBarathy - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2021 12:11 pm

மிக பிடித்தமான ஒன்றை
கை நழுவிப் போக விட்டதென்ன!!
விதி செய்த சதி என்று கடந்து செல்ல,
காணமல் போனது கிடைத்து விட்டதே
என்ன செய்வது
இது அதை விட கொடுமையானதே.....!!

எத்தனையோ மலர்களை கடந்திருப்பேன்
ஆனால் மல்லிகை ஒன்றின் வாசனை மட்டும்
எப்போதும் மணம் வீசிக்கொண்டு இருக்கிறதே
ஒரு முறையேனும் காண்பேனோ என அதை
தேடி திரிந்த நாட்களை இன்று நான்
மிக மோசமாக வெறுக்கிறேன்

என்றைக்கோ மறந்து போய் இருந்தால்
கண்ணால் கண்டும் கையில் கிட்டாத ஒன்று
கண்ணாடி விம்பம் போல் இருந்து - அது
கண்களை ரணமாக்குவதை தவிர்த்திருக்கலாம்

எதோ ஒன்றை மனத்திருத்தி - அதை
இதுவென்று கற்பனை செய்து இரசித்துச்செல்ல

மேலும்

RBarathy - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2020 10:29 am

என் காதலி வர தொடங்கி விட்டாள்.......,

இப்போது அடிக்கடி கவி சிந்துகிறாள்!!

நேற்றிலிருந்து தான் வர ஆரம்பித்திருக்கிறாள்......,

இது தொடர்ந்தாலும் இன்பமே,

பகல் இரவென்று பாராமல் நானும் அவளைக் காதலிக்கிறேன்,

அவளை நான் மட்டும் எதிர்பார்க்கவில்லை

அதற்காக அவள் தவறானவள் இல்லை

இருந்தும் எனக்கு மட்டும் என்று அடம்பிடிக்க தோன்றவில்லை

அவள் எல்லா இடமும் சென்றுவர வேண்டும்

அவள் வந்தால் ஆடை களைய தோன்றுவதில்லை

ஆனந்தமாய் போர்த்தி மூடி உடுக்கவே தோன்றும்

அவளோடு கலந்திட்டால் இன்பமே அது அதிகமானால் துன்பமே......,

சில நேரம் அன்னமாக நடக்கிறாள்

சில நேரம் துப்பாக்கிச் சன்னமாக பறக்கிற

மேலும்

RBarathy - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2020 8:27 am

மயிலவள் அருகில்
நயிலென சென்று,
விரலிடை மாது
அவளென சொல்ல...!
இறுகிய அவள் மனம்
இளகியதென்ன,
இனியவள் குணம்
சறுகியதென்ன,
கனியவள் கன்னம்
சிவந்ததென்ன..?
இனியிவன் தனிமனம்
காதலை மெல்ல!
தனிமையின் வண்ணம்
குறுகியதென்ன,
இவன் கனவெண்ணம்
அவளிடை பின்ன..
இவைதனை வேறு
என்னென்று சொல்ல..?

மேலும்

RBarathy - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2020 8:25 am

உன்னுடன் நான்
பேச எத்தணிக்கவில்லை
ஆனால்!
என் எண்ணங்கள்
அப்படி சிந்திக்க வைக்கின்றன...!

மேலும்

RBarathy - RBarathy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2020 10:41 am

ஏ ஆகாயமே
ஆடை கொள்
உன் நிர்வாணத்தில்
எத்தனை வெளிச்சங்கள்
அத்தனையும் இரவிலே
அப்பட்டமாய் தெரிகிறதே....!!

ஏ ஆகாயமே
மேகங்களால்
ஆடை கொண்டாயோ
உன்னை இரசித்ததற்காய்
மழை அள்ளி தெளிக்கின்றாயோ
இருந்தும் நான் நனைகின்றேன்
அத்தனையும் உனக்காக தான்....!!

நிரந்தரமில்லா நிலவும்
நிலையில்லா வெள்ளியும்
உன் உடனிருந்தாலும்
உன்னை இரசித்த இரசிகனாய்
கனவிலும் நினைவிலும்
காதல் கொள்ள நவில்கிறேன்

ஏ ஆகாயமே
நீல பூக்களை நீந்த விட்டது போல்
நீண்டு விரிந்த தோகையாய்
எல்லையின்றி நின்றாலும்
உன்னை நான் நேசிக்க
என்னை போல் நீயும் தனிமையே
துணை வர வா............!!

R.Barathy

மேலும்

நல்ல வரிகள் தோழரே 05-Jul-2020 1:52 pm
மேலும்...
கருத்துகள்

மேலே