காதல்

மயிலவள் அருகில்
நயிலென சென்று,
விரலிடை மாது
அவளென சொல்ல...!
இறுகிய அவள் மனம்
இளகியதென்ன,
இனியவள் குணம்
சறுகியதென்ன,
கனியவள் கன்னம்
சிவந்ததென்ன..?
இனியிவன் தனிமனம்
காதலை மெல்ல!
தனிமையின் வண்ணம்
குறுகியதென்ன,
இவன் கனவெண்ணம்
அவளிடை பின்ன..
இவைதனை வேறு
என்னென்று சொல்ல..?

எழுதியவர் : இ.பாரதி (30-May-20, 8:27 am)
சேர்த்தது : RBarathy
பார்வை : 211

மேலே