நீ வந்தாய்

உள் மனம் உன்னை சுமக்க
உதிரம் தாய்ப்பால் சுரக்கிறது...

உச்சாணியில் நீ இருக்க
உலகம் வேறு இல்லை எனக்கு...

பரவசம் தரும் வண்ணகள் எல்லாம்
உன் கண்ணில் நான் உணர...

முகம் மலரும் மலரின் வாசம் எல்லாம்
உன் மூச்சிக்காற்றில் நான் அறிய...

நாணத்தில் இருக்கும் காலை சூரியனின் அழகை
உன் முகம் உணர்த்த...

வருடலில் தேகம் சிலிர்க்க
வசந்த காலமாய் நீ வந்தாய்...

- முத்து துரை சூர்யா

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (31-May-20, 8:35 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : nee vanthai
பார்வை : 471

மேலே