அராஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அராஜா |
இடம் | : சதுவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 20 |
பள்ளி ஆசிரியன். கவிதை எமக்கு உயிர்
உறைந்து போகாமல் ஓடி வா.
பேனாவே நீ
கடைசி சொட்டானாயோ?
என் கண்ணீரை நிரப்புகிறேன்
என்னோடு கைகோரு.
உன்னால் என் தேசத்தை புரட்டமுடியுமானால்
குருதி தருகிறேன்
உறைந்து போகாமல் ஓடி வா.
கயவர்களின் கண்ணாமூச்சிகளால்
எச்சில் அட்டைகளாய் ஏழைகள்
இவர்களின் துயரை தூசுதட்டு.
உடல்கள் கூறுபோட்டு
கூறுகட்டி வைக்கப்படுகிறார்கள் ஏழைகள் இங்கே தான்.
தரிசுக்கு வான் தரும்
பரிசை
அணைகட்டி வைக்கும் அறிவாளிகள்
இங்கே தான்.
குருதியோடி குற்றுயிராய் கிடந்தாலும்
சாதி பார்த்தே மனிதநேயம் பேசும்
மாமனிதன் இங்கே தான் .
கல்விச்சாலைகளில் முட்டாளாக்கி
பட்டங்கள் கொடுக்கும்
பகட்டாளர்கள் இங்கே தான்.
இனியவளே
மறதிக்கொல்ல வழி தேடுகிறேன்.
மறந்துபோனதடி உன்முகம்.
உன் முகத்தை
மனதில் மாட்டிவைக்க
ஒரு நிழற்படம் தந்தாயா?
கடற்கரையில் நீயும் நானும்
கைகோர்த்து நடக்கும்போது
காற்றுமணல் உன் அழகு முகத்தை
தீண்டும்போது
கடலை காவு கேட்டதை மறவேனா!
புன்னை மர நிழலில்
அமர்ந்திருந்த போது இலை ஒதுங்கி
வெயில் விழுந்ததில்
நீ பிரிந்தமர்ந்தாய்.
புன்னை மீது கோபம் கொண்டதை
மறவேனா!
பூக்காரிக்கு தெரியாமல்
பூத்திருடி உன் கூந்தலில் சூட்டியபோது
திருட்டு பயலே என்று
செல்லமாய் அடித்ததை மறவேனா!
நேரம் மறந்து பேசும்போது
ஆலயமணியின் ஓசை தொந்தரவில்
சாமியை சாடியதை மறவேனா!
திரையரங்கில் நம் இருக்
நான் குறைகூறுபவன் அல்ல
குறையுள்ளவன்நானே.
கடவுள் இல்லை என்பான்
கால் இடறினாலேபோதும்
ஐயோ! கடவுளே என்பான் .
மதம் இல்லையென்பான்
எங்கோ ஏதோ
மதம் சார்ந்தே பயணிப்பான்.
சாதிகள் இல்லையென்பான்
கீழானவன் மேனிகூடத்தொடமாட்டான்.
பிரசங்கம் பிடிக்காதென்பான்
தன் பிரசங்கத்தை
பிறர் பாராட்டக்கேட்பான்.
மெத்த படிச்சவன் என்பான்
சத்தான கேள்வி கேட்டால்
மெல்ல நகருவான்.
ஏழைக்கு உதவுவேன் என்பான்
அவன் வீட்டு கதவை
மூடியே உண்பான்.
பிறரை ஏளனம் செய்வான்
ஒருபயலும் தன்னை
விமர்சிக்க விடமாட்டான்.
உழைப்பாளியென்பான்
ஊதியம் மட்டும் பார்த்து
உழைப்பை மறப்பான்
பதவி ஆசையில்லையென்பேன்
பதவிக்
தூக்கத்தின் எதிரி துக்கம்
ஜீவராசிகள் உயிர்ப்புக்கான
முதல் அடையாளம் .
மனங்களின் மல்யுத்தத்தில்
மூளை விடிய விடிய
கூத்து பார்க்கும் கனவு மேடை.
உறங்காதவனின் உடல் நோய்
நுழையும் பின் வாசல் .
விழிகள் அப்பிக்கொள்ளும்
சுண்ணாம்பு
மனம் தினமும் கழுவாத பாத்திரம்.
துருப்பிடித்தே கிடக்கும் முகம் .
ஒவ்வொரு இரவிலும்
விழிமலர்கள் உதிர்கிறது
விடியலில் மீண்டும் பூக்கிறது.
உழைப்பவனுக்கு உறக்கம்
மலர்ப்படுக்கை
உழைக்காதவனுக்கு
முள்ப்படுக்கை.
எட்டு மணி நேரம் உறக்கம்
யார் சொன்னது?
நம்மூர் உயர் அதிகாரிகளுக்கு
எட்டு ப்ளஸ் எட்டு
அலுவலகத்தில் எட்டு
வீட்டிலும் எட்டு
இவர்களை நச்சென்
வண்ணத்துப்பூச்சி
பனி படர்ந்தபொழுது
பூக்கள் கூட சோம்பல் முறிக்கும்
வேளையில் -நீ மட்டும்
எப்படி சுருசுருப்பாய்!!!
உன் காகித சிறகினில்
இத்தனை வண்ணக்கலவை பூச
பிரம்மன் என்ன பாடுபட்டானோ!
பூக்கள்மீது
அமரும்
பூ நீ
போர்வை உதறி
பொழுது புலரும் வேளையில்
தேனுன்ன வருகிறாயே
இரவெல்லாம் எங்கு சென்றாய்?
நீ
களைப்பாறி வீசும்
காற்றினால்- என் உயிர்
கொதிப்பாறும்.
உன் அழகில்
நுழையாத விழிகள்
பழிகள் சுமக்கும்.
உன்னை அனபோடு
அள்ளினால் - என் கரங்களில்
வண்ணத்தை அப்பிவிட்டுச்
செல்வாயே!!
எமை புன்னகைக்க வைக்கும்
புது சினிமா
புழுதி மனதில் தேன்தெளிக்கும்
புதுமலர்.
காடுமலை
வாய்