தூக்கம்

தூக்கத்தின் எதிரி துக்கம்
ஜீவராசிகள் உயிர்ப்புக்கான
முதல் அடையாளம் .

மனங்களின் மல்யுத்தத்தில்
மூளை விடிய விடிய
கூத்து பார்க்கும் கனவு மேடை.

உறங்காதவனின் உடல் நோய்
நுழையும் பின் வாசல் .
விழிகள் அப்பிக்கொள்ளும்
சுண்ணாம்பு
மனம் தினமும் கழுவாத பாத்திரம்.
துருப்பிடித்தே கிடக்கும் முகம் .

ஒவ்வொரு இரவிலும்
விழிமலர்கள் உதிர்கிறது
விடியலில் மீண்டும் பூக்கிறது.

உழைப்பவனுக்கு உறக்கம்
மலர்ப்படுக்கை
உழைக்காதவனுக்கு
முள்ப்படுக்கை.

எட்டு மணி நேரம் உறக்கம்
யார் சொன்னது?
நம்மூர் உயர் அதிகாரிகளுக்கு
எட்டு ப்ளஸ் எட்டு
அலுவலகத்தில் எட்டு
வீட்டிலும் எட்டு
இவர்களை நச்சென்று கொட்டு.

எழுதியவர் : அ.ராஜா (8-Sep-16, 11:07 am)
Tanglish : thookam
பார்வை : 152

மேலே