வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சி
பனி படர்ந்தபொழுது
பூக்கள் கூட சோம்பல் முறிக்கும்
வேளையில் -நீ மட்டும்
எப்படி சுருசுருப்பாய்!!!
உன் காகித சிறகினில்
இத்தனை வண்ணக்கலவை பூச
பிரம்மன் என்ன பாடுபட்டானோ!
பூக்கள்மீது
அமரும்
பூ நீ
போர்வை உதறி
பொழுது புலரும் வேளையில்
தேனுன்ன வருகிறாயே
இரவெல்லாம் எங்கு சென்றாய்?
நீ
களைப்பாறி வீசும்
காற்றினால்- என் உயிர்
கொதிப்பாறும்.
உன் அழகில்
நுழையாத விழிகள்
பழிகள் சுமக்கும்.
உன்னை அனபோடு
அள்ளினால் - என் கரங்களில்
வண்ணத்தை அப்பிவிட்டுச்
செல்வாயே!!
எமை புன்னகைக்க வைக்கும்
புது சினிமா
புழுதி மனதில் தேன்தெளிக்கும்
புதுமலர்.
காடுமலை
வாய்க்கால் வரப்பு
ஆறுகடல்
அண்டவெளியெங்கும்
அழகு பரப்பும்
கலைநயம் நீ
கொ்ஞ்சம் என்
வீட்டருகே வந்துவிட்டு போ
உன்னால்
என்,இதய
விரிசல் விலகி
கரிசல் பூக்கட்டும்