கசிந்து வருகிறதே கவிதை
எனக்கு
கவிதையெழுத அவா.
ஆயிரம் பக்கங்கள் எழுதிப்பார்த்து
அனுதினமும் அசைபோட்டு
காடுமேடெல்லாம் சென்று
காட்டகத்தே கெஞ்சிக்கேட்டு
இரவெல்லாம் கண்விழித்து
ஏக்கத்தோடு உள்ளஞ்சோர்ந்து
என்று பிறக்குமோ....
என்ற ஏக்கத்தில்
என்னையே நான்
ஏளனமாய்ப்பார்த்து
வெறித்த பார்வையோடு
விட்டம்பார்த்து அழுகையிலே......
அவள் விழியசைவு
என்மீது பட்டவுடன்
கசிந்து வருகிறதே கவிதை
அ. ராஜா ஆசிரியர்
பிரான்மலை.