நானும் என்வீட்டுச்சிமிழியும்
செரிக்காத நினைவுகளோடு
அசைபோடுகிறேன்- என்னை
சிரித்தழைத்து என்வீட்டுச்சிமிலி.
கையகள குடிசைக்குள்
காரிருள் பொசுக்கும்
அழகு குறையா அந்திவானம்.
பெருவெங்காய வடிவில்
இமைகளில்லா
ஒற்றைவிழி.
காற்றின் பிரம்படிக்கு
நெழியும்போது- என்
கரங்களை நீட்டுவேன்
புன்னகைத்து நன்றி சொல்லும்.
ஏழையின் சிரிப்பில் இறைவி
ஏழ்மையின் வீட்டில் சிமிலி.
உன் கண்வெட்டில் கவி ஊறும்.
உனக்குள் எப்போதுமில்லை
மின்வெட்டு.
ஒழுகும் குடிசைக்குள்
ஓடி ஒழியுமே என்வீட்டுச்சிமிலி.
விடியும்வரை நானிருப்பேன்− உன்
வாழ்வு
விடியும்வரை உடனிருப்பேன்
என்று சொல்லும்.