சிந்தனை செய் மனமே - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிந்தனை செய் மனமே |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 241 |
புள்ளி | : 16 |
எந்தன் தேகம் ஏங்குதம்மா
உந்தன் கரம் கேக்குதம்மா
எண்ணி எண்ணி பார்க்குதம்மா
அன்பு நெஞ்சம் தேடுதம்மா
மாரியம்மா, தாலாட்டு வேணுமம்மா
நீ வந்து கொஞ்சி போ மா!
-வான் நீருக்காக காத்திருக்கும் மண்ணின் ஈர வரிகள்
கண்டேன் தாமரை!
அன்றொரு நாள் பூங்காவிலே
காலை கதிரவன் ஒளிப்பட்டு
பளபளக்கும் பொன்னிற மேனியில் வெண்பொட்டு
அங்குமிங்கும் தலையசைத்து
மரக்கிளைகளை எட்டி பிடித்து
விளையாடி துள்ளியோடிய அந்த தாமரை.
அந்த அழகிலே என் மணித்துளிகள் குளிர்ந்தன,
அன்றொரு நாள் கண்டேன் தாமரையை
உயிரியல் பூங்காவிலே..
தா-மரை : தாவுகின்ற மான்
அத்திங்கள் ஒன்றில்,
எஞ்ஞாயிறு செம்மஞ்சள் பந்தாய் மிதந்தது - பூவாணம்
செவ்வாய் திறந்ததில்,
அவ்வெள்ளி மழை முத்துக்களை பொழிந்தது - எவ்வண்ணம்
ஏழ்வண்ண வரிகளில்,
தோரணவாயில் தோற்றம் கொண்டது?
செங்கதிரவன் எதிரே நாணி வளைந்ததே அது வானவில்லோ!
பிச்சை எடுப்பதை போலவே தோன்றுகிறது,
நடத்துனர் என்னை கடந்து செல்லும்போதெல்லாம்
சில்லரை பாக்கி எதிர்பார்த்து கைகள் நீட்டும் பொழுது
பிச்சை எடுப்பதை போலவே உணர்கிறேன்.