கண்டேன் தாமரை
கண்டேன் தாமரை!
அன்றொரு நாள் பூங்காவிலே
காலை கதிரவன் ஒளிப்பட்டு
பளபளக்கும் பொன்னிற மேனியில் வெண்பொட்டு
அங்குமிங்கும் தலையசைத்து
மரக்கிளைகளை எட்டி பிடித்து
விளையாடி துள்ளியோடிய அந்த தாமரை.
அந்த அழகிலே என் மணித்துளிகள் குளிர்ந்தன,
அன்றொரு நாள் கண்டேன் தாமரையை
உயிரியல் பூங்காவிலே..
தா-மரை : தாவுகின்ற மான்