விளைந்த தேன்துளி -கங்கைமணி
விரிந்த மலரில் விளைந்த தேன்துளி
திரண்டு தவழ்ந்து நுனியிதலடைந்து
பாலினில் விழுந்து அமிழ்ந்து எழுந்து
அமுதம் வழியும் கண்களில் என்னை
காணும் அழகிற்கு ஈடிணையுண்டோ?
இன்பம் கரைத்த குளத்தினுள் விழுந்து
இன்புற்றிருக்கிறேன்..குழந்தையின் அழகில்
என்னையே இழக்கிறேன்...இறைவா காத்திடு..
இக்குழந்தையின் ஆயுளை நிறைவோடு நீட்டிடு.
-கங்கைமணி