அதுவே வானவில்லோ
அத்திங்கள் ஒன்றில்,
எஞ்ஞாயிறு செம்மஞ்சள் பந்தாய் மிதந்தது - பூவாணம்
செவ்வாய் திறந்ததில்,
அவ்வெள்ளி மழை முத்துக்களை பொழிந்தது - எவ்வண்ணம்
ஏழ்வண்ண வரிகளில்,
தோரணவாயில் தோற்றம் கொண்டது?
செங்கதிரவன் எதிரே நாணி வளைந்ததே அது வானவில்லோ!