பனி
![](https://eluthu.com/images/loading.gif)
தைரியசாலியையும்
நடுங்கவைக்கும் தைரியசாலி.
போர்வை விற்பவனின்
குடும்பத்துக்கு வருமானப்
போர்வைப் போர்த்திக்
கௌரவிக்கும் இயற்கைப் பேரரசு
கடுமையாகிப் பொழிவதில்
சில வயோதிபங்கள்
வானுலகு செல்வதற்கு
இலவச பயணச்சீட்டு
வாங்கிக் கொடுக்கின்ற
சமூக சேவகர்.
.பூக்களின் முகத்தில்
மலர்ச்சியின் முழுமை பூசி
சிரிக்கவிடும் மார்கழியின் களி.
பாதணியற்று பயணிக்கும்
என் வறுமைத் தோழனுக்கு
பாதங்களில் பித்த வெடிப்புத்தந்து
துன்புறுத்தும் நரகம்.
*மெய்யன் நடராஜ்