ஸ்ரீதுர்கா சூர்யா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீதுர்கா சூர்யா |
இடம் | : துபாய் |
பிறந்த தேதி | : 13-Oct-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2010 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.... மனதில் எழும் விஸ்வரூபங்களை சிறிய வானவில் வரிகளில் தீட்ட முயற்சிக்கும் ஒரு பேதை....!
நீராடும் நீர்குடமே
நின்றாடும் வரைப்படமே...
நீர்ப்போக நிலையில்லை...
நிறுத்திவைக்க வலையில்லை!
நித்தம் நீ என்னைவிட்டு
நீந்திச் செல்லும் தூரம்...
நத்தையெனப் பின் தொடர்ந்தேன்...
நாலுவார்த்தை சுமந்து நின்றேன்!
நீர்குமிழி நீந்திவர...
நனைந்ததுச் சாரல்...
நிரம்பிவந்த மழையில்!!
ஏ ஆண்மகனே...
கண்களில் ஈரமில்லாமல்
பெண்களை வேட்டையாடுகிறாயே!!!
தாயிடம்
முலைப்பால் குடித்தவன்...
சகோதரியின்
தலைகோதலில் உறங்கியவன்...
நல்ல மனைவியின்
ஸபரிசம் கொண்டவன்...
நினைத்துப்பார்க்க மாட்டான்!
குடும்பங்களின் கண்களை
நனைத்துப்பார்க்க மாட்டான்!
ஈனப்பிறவியே...
ஆண்குறியிருப்பதால் மட்டும்
ஆணாவதில்லை...
இலக்கணம் கூறுகிறது
வேறும் பல தகுதிகள்!
மொட்டுக்களையும் பிடுங்குகிறாய்...
மலர்களையும் நசுக்குகிறாய்...
உனக்கென்று
தராதரம் இல்லை...
தன்மானம் இல்லை...
நீ
மனிதனாக வாழவே
தகுதி இல்லை!!
பிணத்தைத் திண்ணும்
கூட்டம்கூட போடுவதில்லை... .
நாணமில்லாத இந்த...
வ
விழிகள் வலிச் சொன்னது...
இதயம் வழிச் சொன்னது...
இரண்டிற்கும் தூரம் குறைவுதான்
எனினும்...
வலிக் கொண்டு நடக்கவும்
வழிக் கண்டு நடக்கவும்
மின்னல் வந்துபோகும் நேரம்தான்!!
வரைமுறை இல்லை...
வரையறுக்க ஆளுமில்லை
நெற்றியில் பதித்தேன்...
ஒற்றை முத்தம்
தொடங்குகிறேன்
மீதமுள்ள பயணத்திலிறங்க...
நாணம்கொண்டு
பளிங்குமேனி...
வேர்வைமுத்துக்கள் வார்க்க...
அவையங்கள் குளிக்க...
குளித்தும் வேர்க்க...
மல்லிச்செண்டுகள் முகம்துடைக்க...
அதில் இதழ்ப்பதிக்க...
மொட்டுக்கள் விரியக்கண்டேன்
சமவெளியில் இளைப்பாறி...
சிறுகுளத்தில் முகம்பதித்து...
சேர்ந்தேன் வனத்தில்
குடித்தேன் வனத்தேன்..
கொடுத்தேன் வினைத்தேன்
தொடர்ந்தேன்... படர்ந்தேன்...
சொர்கம் எய்தேன்...
கர்வம் பணித்தேன்
உன் காலடியில்!!!