கிரீ டை
வரைமுறை இல்லை...
வரையறுக்க ஆளுமில்லை
நெற்றியில் பதித்தேன்...
ஒற்றை முத்தம்
தொடங்குகிறேன்
மீதமுள்ள பயணத்திலிறங்க...
நாணம்கொண்டு
பளிங்குமேனி...
வேர்வைமுத்துக்கள் வார்க்க...
அவையங்கள் குளிக்க...
குளித்தும் வேர்க்க...
மல்லிச்செண்டுகள் முகம்துடைக்க...
அதில் இதழ்ப்பதிக்க...
மொட்டுக்கள் விரியக்கண்டேன்
சமவெளியில் இளைப்பாறி...
சிறுகுளத்தில் முகம்பதித்து...
சேர்ந்தேன் வனத்தில்
குடித்தேன் வனத்தேன்..
கொடுத்தேன் வினைத்தேன்
தொடர்ந்தேன்... படர்ந்தேன்...
சொர்கம் எய்தேன்...
கர்வம் பணித்தேன்
உன் காலடியில்!!!