சுந்தர் P - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுந்தர் P
இடம்:  Theni
பிறந்த தேதி :  29-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jan-2016
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  3

என் படைப்புகள்
சுந்தர் P செய்திகள்
சுந்தர் P - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2016 5:41 pm

வியப்பூட்டும் விழிகள் இல்லை ,
விசித்திரமான பார்வையும் இல்லை ,
முத்தமிடும் இதழ்கள் இல்லை ,
முத்துமணி அணிய இடையும் இல்லை ,
சிலிர்க்க வைக்கும் சிரிப்பு இல்லை ,
சிந்திக்க வைக்கும் சிலையும் இல்லை ,
கார்மேக கூந்தல் இல்லை ,
காதல் கொள்ள இதயமும் இல்லை ,
ஆனால்...
அவளே உலகின் முதல் அழகி …

“நிலா”

மேலும்

நெஞ்சில் வாழ்பவளும் கண்ணீர் மழை தூவி இருப்பாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jan-2016 11:14 pm
சுந்தர் P - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2016 5:38 pm

பல்லாண்டு காலம் தொடர்ந்திருக்கும்
தாலிக்கொடியை விட ,

பத்தே மதம் இணைந்திருக்கும்
தொப்பூழ் கொடிக்கே பாசமென்னும் உணர்வு அதிகம்

ஏனென்றால்
உன்னால் உருவாக்கப்பட்டது தான்
தாலிக்கொடி உறவு , ஆனால்

உன்னையே உருவாக்கியது
தொப்பூழ் கொடி உறவு ...

மேலும்

அன்பின் பிறப்பிடம் அவ்விடத்திருந்து தான் தொடர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jan-2016 11:13 pm
தொப்பூழ் - தொப்புள் 03-Jan-2016 5:51 pm
சுந்தர் P - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2016 11:58 pm

ஆதியிலே பிறந்த தமிழ்
சாதியினை துறந்த தமிழ்
இதர பல மொழிகளையும்
ஈன்றெடுத்த இனிய தமிழ் - உன்னை

பாதியிலே வந்த மொழி
பகட்டான ஆங்கிலம் பால்
ஏக்கம் கொண்ட உன் மக்கள்
எறிந்தனரோ வீதியிலே...!

ஆண்டி முதல் அரசன் வரை
அத்துனை பேரின் வாழ்க்கை முறை
ஈரடியில் ஈந்த எம் தாய் மொழியாம் தமிழுனக்கு
ஈடு இணை எந்த மொழி...?

ஐம்பெருங் காப்பியமும்,
ஆய கலை அறுபத்து நாலும்
அழகுறத் தந்த தமிழ்
அகில உலகின் அரிய மொழி

இயல், இசை, நாடகமும்
ஈடில்லா இலக்கணமும்
தன்னகத்தே கொண்ட தமிழ்
தரணியிலே தனித்த மொழி

அத்தகைய ஆதி மொழி
அகல் விளக்கு ஜோதி மொழி
உலகத்து செம்மொழியாம்
உயர் தமிழர் நம்மொழியாம்

நம் தாய்மொழி த

மேலும்

நீங்களே இவ்வாறு இயற்றி விட்டு நீச்களே உங்களது பிள்ளைகளை ஆங்கில வழி கல்வி கொடுப்பது சரியா 13-Jan-2016 10:43 pm
வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !! படித்தேன் பூரித்தேன் !! 02-Jan-2016 11:33 am
வீர முரசு கொட்டுவது போல கவியின் வார்த்தைகளில் ஒரு ஆதங்கம்.தமிழ் எனும் நோய் தீர்க்கும் நல் மொழியை விட்டு விட்டு மதுக் கிண்ணம் போல் நோய் சேர்க்கும் வேற்று மொழிகளில் பலர் இன்று விழுந்து கொண்ட மனிதம் என்பதையே மறந்து வாழ்க்கையே சீரழித்து விட்டார்கள்.தமிழை தாய் மொழியாக கொண்டவர்களும் தமிழ் பேசுவதை இந்த மண்ணில் காண்பது மிக அரிது.காலம் எல்லாவற்றையும் மாற்றலாம் ஆனால் தமிழின் புகழை மட்டும் எந்த ஆயுதம் கொண்டாலும் அழிக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2016 1:36 am
கருத்துகள்

நண்பர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே