சுயாந்தன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுயாந்தன் |
இடம் | : வவுனியா- இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 6 |
பயணத்துக்காகத் திறந்த பாதைகளை விட,
மனிதர்களுக்கான பாதைகளே அதிகம்...
பாதைகளோ வெறும்
கொள்ளளவு தான்.
பயணமோ
கனவுகள்,
மரணங்கள்,
கடிதங்கள்,
கவிதைகள்,
றொமான்டிக் Era, க்களைச்
சுமக்கும் கனரகவாகனம்.....
# சுயாந்தன்.
பால்யத்தின் ஓசைகள்.....
=========
என் பால்ய காலத்தில்
என்னோடு படித்த பெண்கள்
எங்கு போனார்கள்
என்று தெரியவில்லை.
சில வேளைகளில்
நான் அவர்களோடு சண்டையிட்டதையும்,
சொல்லாமல் காதலித்ததையும்,
தலைக்குக் கட்டும் றிப்பன்களை இழுத்துவிடுவதையும் நினைத்துப் பார்க்கிறேன்.
நேற்று பாடசாலை வாயிலைக் கடந்து போனேன்.
பகலில் வராத ஞாபகங்கள் அன்றைய இரவில் வந்து பழைய ஆர்வங்களை அபூர்வமாக மீட்டிவிடுகின்றது.
பள்ளி நினைவின்
விடுபடாத நியதிகள்.
"""
வகுப்பறை மொனிட்டர்..
சுவரில் ஒட்டப்பட்ட நேரசூசி..
முட்டுக்கால் தண்டனைகள்..
விஞ்ஞான வாத்தியார்..
ஒன்றுகூடலில் மீன்சந்தை சப்தம்.
புதிய அனுமதிகள்..
த
நான் கடக்கவே
முடியாமல் நின்ற வீதிகளில்
ஒரு 'பபிள்கமை'
மென்று கொண்டே
வாகனங்களை மஞ்சள் கோடுகளில் குடைசாய வைத்து
எனை மீட்ட யட்சிக்கு.......
மரங்களில் துளையிட விரும்பாத மரங்கொத்தியாய் இருந்த
என்னை - தன்
பசுமர நினைவுகள் மீது
கொத்தச் செய்த;
ஆறாம் வகுப்பில்
நான் கண்ட ஓரளவு
அழகான பெண்ணிற்கு....
அகத்துள்ளிருந்து ஆதரித்து
புற நினைவுகளிலிருந்து விலகி எங்கெங்கோ போன குறுந்தொகைப் பெண்ணிற்கு.....
என் ஈகோவுக்கு முன்னால்
தன்னை நிரூபிக்க முயன்று
என்னிடம் தோற்று,
தன்னை வென்ற
கிராமத்துக் காரிக்கு.....
அல்லது
வேற்றுக் கிரகத்தில் மாருதிக்கார்
ஓட்டும் அவளுக்கு.......
எனக்கே புரிய
நான் இழுத்த இழுப்புக்கு
வராத அகராதியின்
அடுத்த பக்கம்.
காற்றின் படபடப்பில்
கடைசிப்பக்கத்தைக் காட்டிநிற்கிறது....
அங்கே உறையற்ற
புத்தகத்தை மூடமுடியாமல்,
மீளவும் காற்று
இழுத்துவிட்ட பக்கத்தில் ,
காற்றின் புதிய வார்த்தைகளை
உச்சரித்துக்
கொண்டிருக்கிறேன்.... றேன்......ன்.....
====
# சுயாந்தன்.