அகராதியின் அடுத்த பக்கம்
நான் இழுத்த இழுப்புக்கு
வராத அகராதியின்
அடுத்த பக்கம்.
காற்றின் படபடப்பில்
கடைசிப்பக்கத்தைக் காட்டிநிற்கிறது....
அங்கே உறையற்ற
புத்தகத்தை மூடமுடியாமல்,
மீளவும் காற்று
இழுத்துவிட்ட பக்கத்தில் ,
காற்றின் புதிய வார்த்தைகளை
உச்சரித்துக்
கொண்டிருக்கிறேன்.... றேன்......ன்.....
====
# சுயாந்தன்.