UMA MAHESWARI - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : UMA MAHESWARI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 1 |
பள்ளியில் சேர்த்தார்கள்
பட்டம் பெற !
புத்தகம் கிழித்தேன்
பட்டம் விட !
உழைத்து விடு என்றார்கள்
உயர்வு பெற !
உறங்கியே கிடந்தேன்
சுகம் பெற !
மூட்டை தூக்கினார்கள்
பணம் பெற !
பணத்தை மதுவிலே கரைத்தேன்
போதை பெற !
தாயும் தந்தையுமே தெய்வமென்றார்கள்
வாழ்வில் உயர்வு பெற !
காதலியே கடவுள் என்றேன்
காதல் பெற!
இன்று
குடிப்பதற்கோ
உடுத்துவதற்கோ
எதுவுமின்றி
சாலையோரம் நின்றேன் !
எல்லாம் அவன் செயல்
என்றார்கள் !
இல்லை
எல்லாம் இவன் செயல்
என்றேன்!
கோடீஸ்வரன்
அம்மாவோடு
தெய்வத்தை ஒப்பிடாதீர்கள்!
தெய்வம் என்ன
தாய்பால் கொடுத்ததா?
தெய்வம் என்ன
தாலாட்டு பாடியதா?
உண்ணாமல்
உறங்காமல்
உனக்காகவே
வாழும்
உன்னதத் தாயை!
இருக்கோ
இல்லையோ
கருப்போ
சிவப்போ
காணாத ஒன்றை
தாயோடு ஒப்பிடலாமா?
இருந்தால்
தாயை போல் இருக்கலாம்!
கோடீஸ்வரன்
நிலவு கூட
உறங்கிப் போகும்
நடுநிசிகளில்!
நட்சத்திரங்கள் கண்ணயர்ந்து
பக்கத்து நட்சத்திரத்தோடு
முட்டிக்கொள்ளும்
நள்ளிரவு நேரங்களில்!
தூக்கத்தை தட்டி
எழுப்பும்
உன் நினைப்பு!
காதலிக்காக எழுதிய கவிதை
கரையான்கள் தின்றுவிட்ட
பொழுதில் நான்!
இன்ப நினைவுக்கு
ஆரத்தி எடுக்கும்
இதயம்... இன்று
மறந்துவிடச் சொல்லி
மனு போடுகிறது!
முழுபரீச்சை முடிந்ததுமே
மறக்காமல் மையடிப்பார்களே!
அது!
வீட்டு முற்றத்தில்
மோதிக்கொண்ட பொது
உனக்கு வலிப்பதாய் சொன்னாய்!
அது!
மறக்க முடியுமா?
மறக்கத்தான்
நினைக்க முடியுமா?
கறைபடிந்த பல்லுக்குள்
என்பெயர் நசுங்கிய சுகத்தை !
ஒ
குறுக்கே போனது பூனை
வலமிருந்தா? இடமிருந்தா?
கண்டுகொள்ளவில்லை!
அலறியது
ஆந்தையா? கூகையா?
புரிந்துகொள்ள நேரமில்லை!
வழியில் பார்த்தது
நிறைகுடமா? குறைகுடமா?
கவலையில்லை!
பெண்ணழைக்க போவது
ஒற்றைப்படையிலா?
இரட்டைப்படையிலா ?
தனியாக வந்தாள்!
காதலித்தோம்!
சேர்த்து வைக்க முறையிட்டோம்!
தள்ளுவண்டியில்
காலம் தள்ளுபவன் என்றே
தடை விதித்தார்கள்!
தள்ளுவண்டிகாரனே தஞ்சம் என்றாள்!
கொஞ்சம் துணிவோம் என்றேன் !
சீர்வரிசையா? செய்முறையா?
தேவையில்லை!
கோவிலா? மண்டபமா?
பாதுகாப்பில்லை!
ராகு காலமா? எமகண்டமா?
தெரியவில்லை!
பதிவு அதிகாரியே
ஆசி வழங்கினார்!
இருமணமும் ஒருமணமா