அம்மாவோடு ஒப்பிடாதீர்கள்

அம்மாவோடு
தெய்வத்தை ஒப்பிடாதீர்கள்!

தெய்வம் என்ன
தாய்பால் கொடுத்ததா?

தெய்வம் என்ன
தாலாட்டு பாடியதா?

உண்ணாமல்
உறங்காமல்
உனக்காகவே
வாழும்
உன்னதத் தாயை!

இருக்கோ
இல்லையோ
கருப்போ
சிவப்போ
காணாத ஒன்றை
தாயோடு ஒப்பிடலாமா?

இருந்தால்
தாயை போல் இருக்கலாம்!

கோடீஸ்வரன்

எழுதியவர் : கோடீஸ்வரன் (18-Dec-13, 7:54 pm)
பார்வை : 1558

மேலே