நிலையாமை

ஆடுவதும் பாடுவதும் அரைகுறையே
அடிபட்டு கீழ் விழுந்தால் தெருகுப்பையே

காற்று உள்ளபோதே நெல்லை தூற்றிக் கொள்ளடா
காலம் கனியும் என்பதல்லாம் கறிக்குதவா பேச்சடா

கரை நின்று யோசிப்பதில் என்ன லாபம்
கட்டுமரம் ஏறினால்தான் வயிறு நிரம்பும்

தண்ணொளி தருவதால் வெண்ணிலாவும் ஒரு பெண்மை
தராமல் போனால் வருமோ அதற்கொரு பெருமை

ஆன்மாவும் உயிரும் அசைக்கிறது உன்னுடலை
அதிலொன்று நின்றாலும் நீபோகும் இடம்சுடலை

காதல் கொள்ளு காதல் கொள்ளு
எல்லோர் மீதும் காதல் கொள்ளு
காமம் கலக்கா காதல் ஒன்றே
உலகை கட்டிப் போடும் மந்திரவில்லு

அன்பாலே உலகை ஆட்சி செய்யவேண்டும்
அரிவாளும் வேல்கம்பும் தூர ஏறிய வேண்டும்
வாழுகின்ற நாள் வரலாற்றில் ஒரு நீர்க்குமிழி
வாழ்ந்து காட்டு சாதித்து காட்டு
நீயில்லை நெல்லுமி
நீயே சிற்பிஉளி!.

எழுதியவர் : சுசீந்திரன் . (18-Dec-13, 8:57 pm)
Tanglish : nilaiyaamai
பார்வை : 88

மேலே