ஓடிபோய் கல்யாணம் கட்டிகிட்டோம்

குறுக்கே போனது பூனை
வலமிருந்தா? இடமிருந்தா?
கண்டுகொள்ளவில்லை!

அலறியது
ஆந்தையா? கூகையா?
புரிந்துகொள்ள நேரமில்லை!

வழியில் பார்த்தது
நிறைகுடமா? குறைகுடமா?
கவலையில்லை!

பெண்ணழைக்க போவது
ஒற்றைப்படையிலா?
இரட்டைப்படையிலா ?
தனியாக வந்தாள்!

காதலித்தோம்!
சேர்த்து வைக்க முறையிட்டோம்!

தள்ளுவண்டியில்
காலம் தள்ளுபவன் என்றே
தடை விதித்தார்கள்!

தள்ளுவண்டிகாரனே தஞ்சம் என்றாள்!
கொஞ்சம் துணிவோம் என்றேன் !

சீர்வரிசையா? செய்முறையா?
தேவையில்லை!

கோவிலா? மண்டபமா?
பாதுகாப்பில்லை!

ராகு காலமா? எமகண்டமா?
தெரியவில்லை!

பதிவு அதிகாரியே
ஆசி வழங்கினார்!

இருமணமும் ஒருமணமாயிற்று
இதற்கு பெயர் திருமணம் ஆயிற்று !

கைவண்டியில் காய்கறி விற்று
கால்வயிறு கஞ்சியும்
கான்வென்டில் குழந்தையும்
நெஞ்சில் நிம்மதியுமாய்!

காதல் இல்லாமல்
ஓடிப்போனவர்கள்
காவல் நிலையத்திலும் !

காசு பார்த்து!
காலம் பார்த்து!

அருந்ததி பார்த்து!
அட்சதை தூவி !
முடித்த திருமணங்கள்
மனது மாற்றிக்கொள்ளாததனால்
நீதிமன்றங்களிலும்!
* * *

கோடீஸ்வரன்

எழுதியவர் : கோடீஸ்வரன் (17-Dec-13, 7:12 am)
பார்வை : 138

மேலே