அவள் புன்னகையில்
நெடு நேரம் கடந்து விட்டது...
காத்திருந்த எனக்கு கால்வலி
அதை காட்டிலும்
காக்க வைத்த அவள் மேல் கொலைவெறி....
இன்று அவள் வரட்டும்
இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்
நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டு விட வேண்டும்...
மீறி ஏதாவது பேசினால் கன்னத்தில் அறைந்திட வேண்டும்....
கோபத்தில் கண்கள் சிவந்தன...
நெஞ்சம் குமுறியது...
இப்போது மட்டும் அவள் அருகில் இருந்தால்?
என்று பற்கள் நர நரத்தது...
அதோ
தூரத்தில் அவள்...
அவளை கண்டதும்
கைகள் இறுகின,
உதடுகள் துடித்தது....
அவள் அருகில் வந்து
சிந்திய புன்னகையுடன் வார்த்தைகளை
உதிர்த்தாள்....
"கொஞ்சம் நேரமாயிடுச்சு செல்லம்.,
நீ வந்து ரொம்ப நேரமாச்சா... கோவமா ?"
உடனே என்னையும் அறியாமல் என் உதடுகள்
"கோவமா உன் மேலா... உனக்காக கொஞ்சம் நேரம் கூட காத்திருக்க மாட்டேனா"...
எனது கட்டளையின்றி வார்த்தைகளை உதிர்த்தன என் உதடுகள்....
இப்படிதான் ஒவ்வொரு முறையும்
அவள் மந்திர புன்னகையில் தோற்று
என்னையே இழந்து விடுகிறேன்....