பிந்துஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிந்துஜா
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Nov-2020
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  9

என் படைப்புகள்
பிந்துஜா செய்திகள்
பிந்துஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2021 5:41 pm

இருக்கி அணைத்து
இரவுடன் இறுக்கி
பற்றி கொள்(ல்)கிறது
தனிமை.....

இரவு முழுவதும்
வழியும் விழி நீருடன்
கூடி குலாவி
விளையாடும்
தனிமை....

தனிமையை அனுபவித்து
கொண்டாடி களித்த
நாட்கள் கரைந்து

உறங்கி கிடந்த
நினைவுகளை
கிளர்த்திவிட்டு ஆனந்த
கூத்தாடுகிறது இன்று
இத்தனிமை.....

மேலும்

பிந்துஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2021 5:57 pm

தென்றல் காற்றே
இரா உலா வரும் நிலவே
உயிராய் இருக்கும் உறவே
என்னுயிர் நீயடா.....
உளி யின்றி செதுக்கினாய்
உன் உருவத்தை என்னுள்.....
உன்னை பிரிந்தால் என்னுயிர்
நிலைத்திடுமோ இம்மண்ணில்
உன்னை நினைத்தே
உலகில் வாழ்கிறேன்...
என்னுயிர் நீயடா.....

மேலும்

பிந்துஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2021 5:51 pm

மீண்டும் மீண்டும் மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்

இப்போது இந்த இரவில் மிச்சமிருப்பது
நானும் எனது தனிமையும்
மட்டுமே...

மேலும்

பிந்துஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2021 9:00 pm

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
கரம் இன்று
தனிமையில்
நடக்கையில்
துணையாக வரவில்லை

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் நெஞ்சம்
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறது

எதுவுமில்லா நேரம்
எல்லமுமாக உடனிருந்து
துன்பத்தில் துணையாக
நின்றாய்.... இன்பங்கள்
நிறைந்த இன்று
மீளா துயரில் ஆழ்த்தி
மீளா துயில் கொள்கிறாய்

செல்லமாக வளர்த்து
சொல்லாமல் சென்றாய்
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னா
போதும் உன்போல்
யாருமில்லை... *அப்பா*

மேலும்

பிந்துஜா - தீபிகா சி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2020 11:33 am

எனது சொந்த கவிதை தொகுப்பகளை பதிவேற்றம் செய்வது எவ்வாறு??

மேலும்

உள்நுழைந்து (login) இடது பக்கம் உள்ள 3 கோடுகள் symbol அழுத்தி எழுத்து எனும் தலைப்பின் கீழுள்ள தலைப்புகளை தேர்ந்தெடுத்து படைப்புகள் சமர்ப்பிக்கலாம் 19-Nov-2020 1:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே