அப்பா

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
கரம் இன்று
தனிமையில்
நடக்கையில்
துணையாக வரவில்லை

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் நெஞ்சம்
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறது

எதுவுமில்லா நேரம்
எல்லமுமாக உடனிருந்து
துன்பத்தில் துணையாக
நின்றாய்.... இன்பங்கள்
நிறைந்த இன்று
மீளா துயரில் ஆழ்த்தி
மீளா துயில் கொள்கிறாய்

செல்லமாக வளர்த்து
சொல்லாமல் சென்றாய்
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னா
போதும் உன்போல்
யாருமில்லை... *அப்பா*

எழுதியவர் : பிந்துஜா (4-Feb-21, 9:00 pm)
சேர்த்தது : பிந்துஜா
Tanglish : appa
பார்வை : 61

மேலே