தேசியம்
தேன் தித்திப்பாய் இனிக்கும் தேசியமெனும் தேறல்
திகட்ட திகட்ட குடித்தால்
தான் வாழ யாரையும் கொல்லும் நஞ்சாய் திரியும்
மதப்பேற ஏற மரமாய் மரத்து மனம்
மன்பதை மடிவதில் திளைக்கும்
அனைவரும் நிகரே எனும் அறிவு அவிஞ்சு
தானே உயர்வெனும் தற்பிடித்தம் தழைக்கும்
எல்லைகள் எழுதி தொல்லைகள் வளர்க்கும்
தேன் இனிப்பாய் இனித்தாலும்
தேள் கொடுக்கே தேசியமெனும் தேறல்