ஆளுயரச்சிலை

புத்தன் பெத்தெடுத்த அரசமரத்தடியிலே
அவுஞ்ச அறிவயெல்லாம் பத்த வைக்கும்
கல்வி கங்கெனவே
ஆளுயர சிலயொன்னு நிக்குதய்யா
முன்னத்தி தேராக
மலையுச்சி ஊத்தாக
மதிலேற கயிறாக
முன்னேற வழிகாட்டி
ஆள்காட்டி விரல் நீட்டி
ஆளுயர சிலையொன்னு நிக்குதய்யா
அடிமை ஆளுனக்கு
உடமையில் பங்கு எதுக்கு
காலுல பிறந்த உனக்கு
கல்வியின் பயன் எதுக்கு
என இல்லா இட்டுகட்டி
இதிகாசக்கதகட்டி
கயமை பேசின கயவரைரெல்லாம்
கல்வியாலே கதறடிச்சு
சட்டத்தால் கொட்டமடக்கி
கையில் நூல் ஏந்தி
ஆளுயர சிலயொன்னு நிக்குதய்யா
வண்ணம் ஆறுந் தொலச்சு
வான் எங்கும் நீலம் நிலச்சாப்போல
வர்ணம் நாலுந் தொலச்சு
வழிவந்த சாதி புதைச்சு
ஊருஞ்சேரியும் இணஞ்சு
உழச்சு உருப்பட்டு மேலோங்கி
ஒன்னா வாழ வழி சொல்லும்
நீல உடுப்புடுத்தின
ஆளுயர சிலயொன்னு நிக்குதய்யா

எழுதியவர் : கொற்றன் (5-Feb-21, 9:34 am)
சேர்த்தது : கொற்றன்
பார்வை : 358

மேலே