தனிமை

இருக்கி அணைத்து
இரவுடன் இறுக்கி
பற்றி கொள்(ல்)கிறது
தனிமை.....

இரவு முழுவதும்
வழியும் விழி நீருடன்
கூடி குலாவி
விளையாடும்
தனிமை....

தனிமையை அனுபவித்து
கொண்டாடி களித்த
நாட்கள் கரைந்து

உறங்கி கிடந்த
நினைவுகளை
கிளர்த்திவிட்டு ஆனந்த
கூத்தாடுகிறது இன்று
இத்தனிமை.....

எழுதியவர் : பிந்துஜா (9-Jun-21, 5:41 pm)
சேர்த்தது : பிந்துஜா
Tanglish : thanimai
பார்வை : 136

மேலே