வாழ்ந்திட வழிகாட்டுது

காலம் கடந்து செல்கிறது
அதன் வழியில்
பூமி நிற்காது சுழல்கிறது
தன் பாதையில் !

நேற்று எனும் இறந்தகாலம்
இன்று எனும் நிகழ்காலம்
நாளை எனும் எதிர்காலம்
நம் வாழ்வின் உள்ளடக்கம் !

நிரந்தரமில்லா வாழ்வில் அதை
நினையாது இயங்குகிறான்
நித்தமும் மனிதன் !

நடந்ததும் கடந்ததும் நிழலாடும்
நெஞ்சில் நிச்சயம்
உச்சம் சென்றாலும் திரும்பி
பாராதவன் மனிதனில்லை !

தவறென தெரிந்து செய்வது
நெறிகெட்ட மாந்தரே
நல்வழி காட்டும் மனங்களை
அவமதிப்பது அறிவீனம் !

உரைக்கும் உண்மைகள்
உலகில் தத்துவங்கள் ஆகுது
போதிக்கும் அறிவுரைகள் போராடி
வாழ்ந்திட வழிகாட்டுது !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Jun-21, 3:38 pm)
பார்வை : 379

மேலே