எல்லோரும் வைத்தியரே

"எல்லோரும் வைத்தியரே"

விற்பவரும்...
வாங்குபவரும் ...
தற்போதெல்லாம்
வைத்தியராகி வருவது
மரபாகிவிட்டது...

"அம்மா...
தக்காளி வாங்குங்கள்
முகப்பொலிவு
கூடும்"...என்கிறான்
விற்பவன்.

"இல்லை...இல்லை
அது ...என் சிறுநீரகக்
கற்களுக்கு ... ஆகாது"
என்கிறான்...வாங்குபவன்.

வெண்டை
புண்ணாற்றும் என்கிறான்
அவன் ...
இல்லை...
ஊறல் எடுக்கும் என்கிறான்
இவன்.


முந்திரி
மற்றதற்கு ... நல்லது
என்கிறான் அவன் ...
இல்லை ....
கொழுப்பைக் கூட்டும்
என்கிறான் ... இவன்.


நாட்டில்
வைத்தியர்களுக்குப்
பஞ்சமில்லை.

எழுதியவர் : PASALI (9-Jun-21, 3:24 pm)
சேர்த்தது : PASALI
பார்வை : 23

மேலே