உணவு

"உணவு"

இரத்தமாய்
அன்றோ...
கேட்காமல் கிடைத்தது ....

பாலாகி
நேற்றோ ...
அழுது கிடைத்தது ....

சோறாக
இன்றோ
சேற்றிலே கிடைத்தது ...

நாளை
எதாகக் கிடைக்கும்
புதையுண்ட பின்னே?...

எழுதியவர் : PASALI (9-Jun-21, 1:35 pm)
சேர்த்தது : PASALI
Tanglish : unavu
பார்வை : 37

மேலே