நானும் ஆப்ரகாம் லிங்கன்தான் – கவிதை நடையில் ஒரு கடிதம்
நானும் ஆப்ரகாம் லிங்கன்தான் – கவிதை நடையில் ஒரு கடிதம். .
வணக்கம்.
மான்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கு.
அன்று
உங்கள் பள்ளியில் படித்த முன்னால் மாணவன்.
இன்று
உங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்
இந்நாள் மாணவனின் தந்தை என்ற முறையில்,
ஒரு சராசரி தந்தையாய்
இந்த கடிதம்.
மாணவப் பருவம்
குறிப்பாய் பள்ளிப் பருவம்
அதுவும் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பயின்ற காலம் அற்புதமான காலம்.
சுருக்கமாய் உங்களோடு பகிர்வதில் ஆனந்தம்.
நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை
அதிசயமாக கருதினார்கள் எங்கள் ஊரில்.
அந்த அளவுக்கு
இந்த சமூகம்
என்னைப் பற்றியும்,
என் கல்வி அறிவு பற்றியும்
குறைத்து மதிப்பீடு செய்து வைத்திருந்தது.
நான் படித்தேன்
அவ்வளவுதான்.
என்னை வெற்றி பெற வைத்தது
என் ஆசிரியர்கள்தான்.
என் அதிகபட்ச்ச மதிப்பென்
கணிதத்தில்தான் 046.
ஓய்வுபெற்ற ஆசிரியர்
மாண்புமிகு சிவமூர்த்தி ஆசிரியர்தான்
எனக்கு கணித ஆசிரியர்.
எனது பத்தாம் வகுப்பு
முதல் பொதுத்தேர்வில்
நான் பெற்ற மொத்த மதிப்பெண் 201.
அடுத்து மேல் நிலையில்
கொடுத்த பிரிவை ஏற்று படித்தேன்.
அடுத்த பொதுத்தேர்வில்
ஆங்கிலத்தில் தோற்க்கவில்லை
சறுக்கிவிழுந்தேன்.
ஆறுதல் தந்தது சமுகம்.
அறவனைத்தது குடும்பம் .
ஊக்கப்படுத்தியது பள்ளியும்,ஆசிரியர்களும்.
வெற்றி பெற்றேன்.
எதில் வீழ்ந்தேனோ.
வீழ்ச்சியிலிருந்து எங்கிருந்து எழவேண்டும் என்று முயற்ச்சித்தேனோ அதில் , அங்கேயே நான் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்.
இந்த இமாலய வெற்றியை தந்தது ,
நான் பெற்ற முதல் தோல்விதான்.
இப்போதுதான் நான் உங்களோடு பேச தொடங்குகிறேன்.
இப்போது காலம் கெட்டுவிட்டது என்கிறார்கள் –
இல்லை.
இன்றைய மாணவர்கள் சரியில்லை என்கிறார்கள்-
இல்லை.
சமூகமும்.பெற்றோர்களும் பொறுப்பற்றவர்கள் என்கிறார்கள்-
இல்லை.
அன்றைய ஆசிரியர்கள்போல் இன்றைய ஆசிரியர்கள் இல்லை என்கிறார்கள்
இல்லை.
நவீன அறிவியலின் தாக்கத்தினால்
உருவான கண்டுபிடிப்புகளான
சமூக ஊடகம்
இன்றைய மாணவ சமூகத்தை சீரழித்துவிட்டது என்கிறார்கள்-
இல்லை.
இதில் எதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சமூகம் அழகானது.
பெற்றோர்கள் பொருப்பானவர்கள்.
ஆசிரியர்கள் சிறந்தவர்கள்.
ஒவ்வொன்றும் அதன் போக்கில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஒன்றில் மட்டும் முறன்பட்டு நிற்கிறது ஒட்டுமொத்த சமுகமும்
வெற்றியில்,
வெற்றியை அடைவதில்.
தோல்வியில்,
தோல்வியை ஏற்பதில்.
அன்றைய சமூகம்
கல்விக்காக ஏங்கியது .
கல்வியை அடைய தடைகளை உடைத்து பயணப்பட முயற்சித்தது.
ஆதலால்
அதில் ஒரு இனிமை இருந்தது.
ஆக
குழந்தைகள் குழந்தைகளாக இருந்தன
சுய சிந்தனையில் வளர்ந்தன,
சுதந்திரமாய் ஆசிரியர்கள்
குறைந்தபட்ச எதிபார்ப்போடு
சமுகமும். பெற்றோர்களும்.
தோல்வி சதவீதத்தில் அதிகரித்தும்
மன அழுத்தத்தில் ஆசிரியர்கள் ஒருபோதும் இருந்ததில்லை.
ஆனால் இன்று,
வெற்றிமட்டுமே இலக்காய் கொண்டு
திட்டமிடப்படுகிறது முயற்ச்சியும்,பயிற்சியும்.
தோல்வி அவமானமாக கருதப்படுவதால்
சமூகத்தின் பார்வையில் சிக்காமாலிருக்க
சிறார்களின் விபரீத முடிவுகள்
அரசின் அத்தனை இயந்திரங்களையும் ஆட்டம் கான செய்கிறது.
ஆக தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தினை கற்றுக்கொடுங்கள்.
அழகான குரலில்
தெளிவான விளக்கம் - குறளுக்கு
தினம்தோரும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கொடுங்கள்.
நூலகமும்
அங்குள்ள புதுபுதுப் புத்தகமும்
வாழ்வின் வழிகாட்டி
என விளக்கி சொல்லுங்கள்.
பிழை செய்வார்- பொருத்து திருத்துங்கள்.
தவறு செய்வார் – மண்ணித்து ஆருதல் சொல்லுங்கள்.
குற்றம் செய்யாமல் ஒவ்வொரு குழந்தையும்
எதிர்கால வாழ்வினை சிறப்பாய் அமைத்துக்கொள்ள, பக்குவப்படுத்துங்கள்.
அவர்களோடு அன்பாய் பழகுங்கள்.
அனுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
கல்வி என்பது
ஒரு மதிப்பெண் கேள்விக்கு
விடை சொல்லி
அறிவினை உறுதிப்படுத்தி
அதிகாரத்தில் உட்கார்ந்து
மனிதநேயமற்றமுறையில் பணம் சம்பாதிக்கும்
மகத்துவமான தொழிலை செய்ய உதவும் கருவி இல்லை “ கல்வி”
என்பதினை
உரிய எடுத்துக்காட்டுகளோடு
உயர்த்தி சொல்லுங்கள்
உண்மையை புரிந்துகொள்ளட்டும்
இன்றைய இளய தலைமுறை.
கேள்வி அவசியம்,
தோல்வி அவமானமல்ல,
ரவுத்திரம் பழகிட பயிற்ச்சி
உண்மையாய் அடையும் வெற்றின் உன்னதம்.
அறியாமை கலைந்திட ஊக்கமே சிறந்தவழி
உயர்வு என்பது வசதியில் இல்லை,
எளிமையோடு கூடிய உழைப்பில் உள்ளது என்று
வாழ்வின் தத்துவத்தை விளக்கி சொல்லுங்கள்.
இவை எல்லாவற்றையும்
கற்றுக்கொடுத்து
அற்புதமான உங்கள் பயிற்சி பட்டரையிலிருந்து
மாண்புமிகு மாணவச் செல்வங்களை
இந்த சமுகத்துக்கு
அனுப்பிவையுங்கள்.