கவிதைபாவலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிதைபாவலன்
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  21-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2020
பார்த்தவர்கள்:  507
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தமிழ் காதலன்

என் படைப்புகள்
கவிதைபாவலன் செய்திகள்
கவிதைபாவலன் - எண்ணம் (public)
31-May-2021 6:46 pm

கருவில் சுமந்த அன்னையே உன்னை என்ன சொல்லி பாராட்டுவது,

ஒரு பெண்ணை ஈன்றெடுத்த சித்திரமே,
அவளை யார் இனி சீராட்டுவது,
அவளை தாங்கிய உன் கைகளை
அவள் தாங்குகின்ற நேரம் வந்ததும் அவளை விட்டு விண்ணுலகம் சென்று-விட்டாயே,
இரக்கம் இல்லாத இறைவா...
பருவமடைந்த மங்கை,
அவள் வெக்கத்தை பார்ப்பதற்குள் பறித்துவிட்டாய்,
அவள் திருமணத்தை பார்ப்பதற்குள் பறித்துவிட்டாய்,
அவள் ரகசிய ஆலோசகரை
பறித்துவிட்டாய்,
இதையெல்லாம் தாங்கி கொள்ள 
பக்குவம் வருவதற்குள்
பறித்துவிட்டாய் அவளை ஈன்றெடுத்த அன்னையின் உயிரை.! 

அனைவரிடமும் இரக்கம் கொள் மனிதா என்று கீதையில் இறைவன் சொன்னாலும், 
அதை இறைவனிடம் எதிர்பார்த்தது
மனிதனின் தவறு தான் ..!


மேலும்

கவிதைபாவலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2020 1:38 pm

நீ வெளியே வந்தால்தான்
உன்னை கொள்வேன் என்று
சொல்கிறது கொரானா…..

நீ வெளியே வரவில்லை
என்றாலும் கொள்வேன் என்று
சொல்கிறது வறுமை ….!

மேலும்

கவிதைபாவலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2020 9:23 pm

ஊஹானில் பிறந்தாய்

உறவாடி நுழைந்தாய்

உறக்கம் கலைத்தாய்

உயிரை உருவுகிறாய்

விழித்தெழுந்து முழிக்கிறோம்

விடை தெரியாமல்

நீயோ உல்லாசமாய் உலகெங்கும் உலா வருகிறாய்

ஒரே மூச்சில் உலகையே புரட்டி விட்டாய்

முகமூடி மனிதர்கள்

வெறிச்சோடிய சாலைகள்

காலியாய் கடைகள்

அடைபட்டு கிடக்கும் அலுவலகங்கள்

சிறுவர்களின் சிரிப்பில்லா பூங்காக்கள்

நிரம்பி வழியும் விமான நிலையங்கள்

சரிந்த பங்குச் சந்தைகள்

சல்லியாய்ப் போன மில்லியனர்கள்

உறைந்து போன வல்லரசுகள்

கண்னுக்குத் தெரியாமல் நிற்கின்றாய்

விஸ்வரூபம் எடுக்கின்றாய்

நீ யார்? எதற்காக வந்தாய்?

மசூதிகளில்

மேலும்

கவிதைபாவலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2020 7:30 pm

அயல்நாட்டில் அலுவல் செய்தால்
நினைத்த வாழ்க்கை அமையும்
என்று
யார் கூறியதென
தெரியவில்லை,
நம்மை பிரிக்க காலத்தின்
சூழ்ச்சி என நினைத்துக்கொள்…

தொலை தூரமாய்
தூரத்தில் இருந்து
தொலைபேசியில்
நாம் பேச வேண்டிய
துர் பாக்கிய நிலை...

வெகு தொலைவாய்
நீ இருந்தாலும்
என் நெஞ்சுக்குள் நிலையாய்.
இருக்கிறாய்..

உன்னை சந்திக்கும்
அந்த நாள் என் கண் முன்னே
சங்கமிக்கிறது தினமும்...

உடலால் தூரத்திலும்
உருவமாய் பக்கத்திலும்
உணர்வால் என் அருகிலும்
நீ இணைந்து இருக்கிறாய்
எப்பொழுதும்.....

பொக்கிசமாய்
சேகரித்து வைத்து
தினமும் ஓராயிரம்
முறை படித்து
பார்க்கிறேன்
நீ அனுப்பிய
குறுஞ்ச

மேலும்

கவிதைபாவலன் - கவிதைபாவலன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2020 5:27 pm


ஒரு ஆணின் கோபத்தை கண்டு வெறுத்து விடாதீர்கள்.,
ஏனென்றால், 
அக்கோபத்திற்கு பின்னால் எண்ணிலடங்காத 
ஆசைகளும், அன்புகளும் ஒளிந்து இருக்கின்றன, 
இதை புரிந்து கொண்டு பயணம் தொடங்கியவர் சிலர்,
புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்பவர்கள் பலர்..! - கவிதை_பாவலன் 

மேலும்

கவிதைபாவலன் - கவிதைபாவலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2020 11:51 pm

தாயின் அன்பிலும் எதிர்ப்பார்ப்பு
தந்தையின் அறிவிலும் எதிர்ப்பார்ப்பு
சகோதரனின் உலகிலும் எதிர்ப்பார்ப்பு
சகோதரயின் உறவிலும் எதிர்ப்பார்ப்பு
காலத்தின் நிலையிலும் எதிர்ப்பார்ப்பு
காதலின் நிலைமையிலும் எதிர்ப்பார்ப்பு
எதிர்ப்பார்ப்பு நிராகரிக்கப்படும் ஒருநாள்
உன் நிலை உணர்த்தப்படும் அந்நாள்
நிராகரிக்கப்படுவது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல,
உன் உறவும்! காரணம் எதிர்ப்பார்த்தது நீ!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே