எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருவில் சுமந்த அன்னையே உன்னை என்ன சொல்லி பாராட்டுவது,...

கருவில் சுமந்த அன்னையே உன்னை என்ன சொல்லி பாராட்டுவது,

ஒரு பெண்ணை ஈன்றெடுத்த சித்திரமே,
அவளை யார் இனி சீராட்டுவது,
அவளை தாங்கிய உன் கைகளை
அவள் தாங்குகின்ற நேரம் வந்ததும் அவளை விட்டு விண்ணுலகம் சென்று-விட்டாயே,
இரக்கம் இல்லாத இறைவா...
பருவமடைந்த மங்கை,
அவள் வெக்கத்தை பார்ப்பதற்குள் பறித்துவிட்டாய்,
அவள் திருமணத்தை பார்ப்பதற்குள் பறித்துவிட்டாய்,
அவள் ரகசிய ஆலோசகரை
பறித்துவிட்டாய்,
இதையெல்லாம் தாங்கி கொள்ள 
பக்குவம் வருவதற்குள்
பறித்துவிட்டாய் அவளை ஈன்றெடுத்த அன்னையின் உயிரை.! 

அனைவரிடமும் இரக்கம் கொள் மனிதா என்று கீதையில் இறைவன் சொன்னாலும், 
அதை இறைவனிடம் எதிர்பார்த்தது
மனிதனின் தவறு தான் ..!


நாள் : 31-May-21, 6:46 pm

மேலே