அயல்நாட்டு காதல்
அயல்நாட்டில் அலுவல் செய்தால்
நினைத்த வாழ்க்கை அமையும்
என்று
யார் கூறியதென
தெரியவில்லை,
நம்மை பிரிக்க காலத்தின்
சூழ்ச்சி என நினைத்துக்கொள்…
தொலை தூரமாய்
தூரத்தில் இருந்து
தொலைபேசியில்
நாம் பேச வேண்டிய
துர் பாக்கிய நிலை...
வெகு தொலைவாய்
நீ இருந்தாலும்
என் நெஞ்சுக்குள் நிலையாய்.
இருக்கிறாய்..
உன்னை சந்திக்கும்
அந்த நாள் என் கண் முன்னே
சங்கமிக்கிறது தினமும்...
உடலால் தூரத்திலும்
உருவமாய் பக்கத்திலும்
உணர்வால் என் அருகிலும்
நீ இணைந்து இருக்கிறாய்
எப்பொழுதும்.....
பொக்கிசமாய்
சேகரித்து வைத்து
தினமும் ஓராயிரம்
முறை படித்து
பார்க்கிறேன்
நீ அனுப்பிய
குறுஞ்செய்தியை...
அந்நேரம் என்னையும்
அறியாமல் என்னுள்
நுழைந்து தாலாட்டி
செல்கிறாயடி
பெண்ணே...
அந்த நிமிடம்
என் சோகம்
மறைத்து நீ
நிலவில் வலம்வருவதாய்
உணர்கிறேன் நான்…
என்னுள் பல சோகம்
இருந்தாலும்
எங்கோ அயல்நாட்டில்
என் காதலும் அவளுடன் சேர்ந்து
வாழ்கிறது
என நினைத்து
காலத்தை நகர்த்துகிறேன்….!