anithanirmal - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : anithanirmal |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 17 |
இது அல்லவா வாழ்க்கை
ராஜயோகம் கூடிய வாழ்க்கை
நேற்றுவரை தொழிலாளி
இன்றுமுதல் நான் முதலாளி
நேற்றுவரை வாடகைக்கட்டி மாளவில்லை
இன்று வாங்கிவிட்டேன் சொந்தமாய் ஒரு வீடு
பேருந்து பயணமே என் வாடிக்கை
இன்று காத்திருக்கிறது என் கார் - வீட்டு வாசலில்,
இன்றே தொண்டங்கிவிட்டது என் வெளியூர் பயணம்
நாளை நாடு திரும்பினால் தொடரும் கவனம்
எல்லையற்ற சந்தோஷங்கள்
குறைவில்லா வருமானம்
போதுமடா! கொட்டித்தீர்க்கிறது இன்பங்கள்
இன்னும் ஏதேனும் மிச்சம் உண்டா, சொல்லு
குருப்பெயர்ச்சி புத்தகமே!
என் பெற்றோர் எனக்காக என்ன செய்தார்கள்
என்று எண்ணுவதைவிட
நீ உன் பெற்றோருக்கு என்ன செய்தாய்
என்று எண்ணி பார்
உனக்குள் ஒரு லட்சியம் உருவாகும்...
இன்றும் பசியுடன் தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கிறோம்
உணவை தேடி,
அயல் நாட்டில் பிறந்திருந்தால் எங்களை வளர்க்க இருக்கின்றனர்
ஆயிரம் கோடி,
மீதமான உணவை கொடுத்தாலே இருப்போம் நாங்கள்
உங்கள் வீட்டு வாசப்படி,
யாரும் இல்லாத அனாதையாய் இருக்கிறோம்,
தாய் நாட்டில் பிறந்து என்ன எங்கள் சாபமா!
எங்களையும் கொஞ்சம் திரும்பி பாருங்கள்
என்று ஏங்குகிறது நாட்டு நாய்கள்.
உன்னை பாலூட்டி சீராட்டி
உன்னையே என் வாழ்க்கை என்று
வாழ்ந்து வந்தேன்,
என்னை தினம் தினம் சாகடித்துவிட்டு
சென்றுவிட்டாயோ மகனே!
உன் காதல் தோல்வியால்....
தாயை போல் சோறு ஊட்டி
எட்டாத உயரங்களை உன் தோலில் எட்டி
சைக்கில் சவாரியில் உலகத்தை காட்டி
தோல்வியில் எங்கள் தோலை தட்டி
எங்களை நெருங்கும் தீமைகளை விரட்டி
எங்கள் தேவைகளுக்குகாகவே வாங்குவாய் வட்டி
நீ இப்படி சுயநலமற்று வாழ்வது எப்படி
என்றும் எங்கள் கதாநாயகனாக வாழும் தந்தையே!
-- அனிதா
புன்னகையுடன் புகைப்படம் எடுத்தோம்
எங்கள் புன்னகையை தொலைத்துவிட்டு வீடு திரும்பினோம்
உலகில் சமுத்திரமாய் பரவிருக்கும் கடல் தாயே
உன் மனதில் ஒரு துளி ஈரம் கூடவா இல்லாமல் போயிற்று
இனி நாங்கள் என்செய்வோம்
என்று கதறுகின்றனர் பெற்றோரை பறிகொடுத்தப் பிள்ளைகள்
-- அனிதா
என்னுடைய சாவுகூட எனக்கு அச்சம் தரவில்லை
பல இரவுகளில் அச்சுறுத்துகின்றன
என் உயிருக்கும் மேலானவர்களை
மரணம் நெருங்கிவிடுமோ என்று.
-- அனிதா
மீன் வளர்க்க ஆரம்பித்தேன் உன் கண்களை காண
ரோஜா கூட்டத்தை வளர்த்தேன் உன் இதழ்களை ரசிக்க
நிலவொளியில் படுத்தேன் உன் முகம் பார்க்க
குழந்தைகளுடன் விளையாடினேன் உன் சிரிப்பை நினைவுகூர
நீ என்னை விட்டு பிரித்தாளும்
உன் அழகை ரசித்து கொண்டு தான் இருப்பேன் இயற்கை சாகும் வரை
உன் பிரிவை எண்ணி நான் கலங்குவதில்லை, நான் வளர்க்கும் மீன்கள் துடிதுடித்துவிடும் என்று
நீ என்னுடன் வாழ்ந்த வாழ்க்கை குறைவேயாயினும், என் மனம் வேறொர்த்தியை ஏற்கவில்லை
என்றும் கடவுளை வேண்டுவேன், அடுத்த பிறவியிலாவது உன்னுடன் நிறைவான வாழ்க்கை வாழ
உன் காதலை சுமந்தபடி வாழும் உன் அன்பு கணவன்