அடடே இது அல்லவா வாழ்க்கை

இது அல்லவா வாழ்க்கை
ராஜயோகம் கூடிய வாழ்க்கை
நேற்றுவரை தொழிலாளி
இன்றுமுதல் நான் முதலாளி
நேற்றுவரை வாடகைக்கட்டி மாளவில்லை
இன்று வாங்கிவிட்டேன் சொந்தமாய் ஒரு வீடு
பேருந்து பயணமே என் வாடிக்கை
இன்று காத்திருக்கிறது என் கார் - வீட்டு வாசலில்,
இன்றே தொண்டங்கிவிட்டது என் வெளியூர் பயணம்
நாளை நாடு திரும்பினால் தொடரும் கவனம்
எல்லையற்ற சந்தோஷங்கள்
குறைவில்லா வருமானம்
போதுமடா! கொட்டித்தீர்க்கிறது இன்பங்கள்
இன்னும் ஏதேனும் மிச்சம் உண்டா, சொல்லு
குருப்பெயர்ச்சி புத்தகமே!

எழுதியவர் : அனிதா (2-Aug-16, 1:01 pm)
பார்வை : 195

மேலே