சாலை சாகசம்

வயதின் வீரம்
வாகன வேகம்
விபத்தின் மோகம்
வருத்தமாய் சோகம்!

வாழ்க்கையின் சோகத்தை
வரவேற்கும் விபத்துகள்!
நாமே வரவழைக்கும்
சாலை விபத்துக்கள்!

சரித்திரம் வேண்டி பிறந்த உலகில்
சாலையில் மாய்வது பாவமா! சாபமா!

காளையாய் வீரம் செய்ய களங்கள் உண்டு
விளையாட்டு களங்கள் உண்டு!
சாலையில் வேண்டாம் சாகசம் காளனைத் தேடும் சவகாசம்!

கோடியில் புரளும் கோமானோ
குடிசையில் வாழும் பாமரனோ
விலையில்லா மானிடம் வீழும் சாலையில் பிழையாலே!
கண நேர அலட்சியப் பிழையாலே!

சாலையில் கவனம் கொண்டு
சங்கடம் தவிர்ப்போம்!
விபத்தில்லா உலகு படைத்து
விருப்பமாய் வாழந்திடு்வோம்
வாரீர்! வாரீர்!வாரீர்!

எழுதியவர் : கானல் நீர் (2-Aug-16, 10:05 am)
Tanglish : saalai saagasam
பார்வை : 141

மேலே