உரிமை வறுமை
மதவாதத்தில் மரித்துப் போனது மனிதம்,
இனவாத்தால் இழந்து போனது உரிமையில்லா சமத்துவம்,
சுதந்திரப் போர்வையில் காட்சிப் பொருளானதுப் பெண்மை,
தோலும் காதலுமாய் அடக்குமுறை நாடுது அர்த்தமற்ற ஆண்மை, இனாம் என்னும் மூன்றெழுத்தில் இடறிக் கிடக்குது நம் குடியுரிமை,
வீர நடை போடும் விலைவாசியிடம் விடுபட வழிதேடுது ஏழையின் வறுமை,
மதுக்கடையில் முடிகிறது உழைத்தவனின் தினக்கூலி, விளைச்சல் இன்றி தற்கொலைக்கு துணிந்தது உழவனின் உயிர் விதி, இவற்றை மாறச் சொல்லும் தகுதி எனக்கில்லை - அன்றி
இம்மானிடர்க் கூட்டத்தில் பிறந்ததும் என் பிழையில்லை...!