வாழ்ந்து விட்டு போவோமே
நாம் வாழ்வதெல்லாம்
ஓர் வாழ்க்கையா.....?
இயந்திரத்திற்கும்
நமக்கும்
வித்தியாசம்
என்பதே இல்லாமல்
போய்விட்டது.....
சிரித்தால்
சிரிக்காமல்
அழுதால்
அழாமல்
எதிரே இருக்கிறவன்
இருக்கானா
இல்லையா
என்பதை கூட
அறியாமல்
வாழும் வாழ்க்கை
பாறையில் கூட ஈரம் இருக்கும்
இந்த மனித மனங்களிலோ
கள்ளிச்செடி மண்டி கிடக்கிறது
அன்பிற்கு தலைவணங்கியது போய்
பணத்திற்கு
சீரம் தாழ்த்தி
வீழ்ந்துகிடக்கிறோம்
பண்பில்லா பணம் எதற்கு
அறிவில்லா படிப்பு எதற்கு
பாசம் இல்லா பந்தம் எதற்கு
உண்மையில்லா உறவு எதற்கு
அன்பில்லா உலகம் எதற்கு?????
......
.....
.....
எதற்கு ?
காலத்தை ஓட்ட.
எல்லோரையும் போல்
ஒரு வாழ்க்கை
என்னால்
வாழ முடியாது
ரசனை இல்லா உலகம்
பூவை நசுக்கி
வண்ணத்தை வெறுமையாக்கி
உள்ளத்தை விற்று
அடிமைசாசனமாய்
உலகை மாற்றி
பறவைகளை பிடித்து கீழே தள்ளிவிட்டு
முந்திக்கொண்டு
பறக்கும்
முறிந்த சிறகாய்
காற்றில் அலை மோதும்
கடைசி இறகாய்
அதுவும்
இறுதியில்
மண்ணாய்
இருப்பது
ஒரு வாழ்க்கை
வாழ்ந்துவிட்டு போவோம்
வாழவைத்துவிட்டு போவோம்
~ பிரபாவதி வீரமுத்து