avighaya - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : avighaya |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 27-Jun-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 638 |
புள்ளி | : 345 |
தமிழன் என்பதில் பெருமை கொள்ளும் ஒரு மெல்லிதயம் உடையவன். எழுத்தில் பதிக்கப்பட்டுள்ள பதிப்புகள் அனைத்தையும் படிக்கவில்லை, ஆனால் என்னை நிச்சயம் ஏதோ ஒரு புது உலகத்திற்கு எடுத்துச் செல்கிறது.. என் எழுத்தில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தவும்...
உங்கள் கருத்துக்கள் என்றுமே உற்சாகப்படுத்தும்... நம்பிக்கையுடன்
சு.சங்கர் கணேஷ் (எ) அவிகயா
avighaya@gmail.com
http://avighaya.wordpress.com
சொட்ட சொட்ட நனைந்திட்டேன்
சொட்டும் விழியில் விழுந்திட்டேன்
சொட்டாமல் புன்னகையோ இதழோரம்
சொட்டும் அன்புரசத்தில் மகிழ்ந்திட்டேன்
சொல்லவோ அவளன்பை கவிசுவையாக
சொல்லினிக்கும் தமிழ் அமுதோடு....
மஞ்சள் வெயில் கிறங்கடிக்க
மதிமயக்கும் மாலையிலே
மண்வாசம் அடித்ததோ
மங்கையவள் தமையன் அவன்
மங்கா ஒளிவீசி வந்தானோ..
தமக்கையோ காத்திருக்க
தனியே பார்த்திருக்க
தமையனவன் வந்தானோ
தங்கையை தாலாட்டி சீராட்ட...
கண் உறங்கு கயல்விழியே
கண் இருட்டி வெளி இருண்டு
கருமை நிறமானதோ வெண்மேகம்
கண்மணியே கண் உறங்கு..
வெளியோடும் மேகமதில் முழுமதி
வெளியே வந்துதித்து உனை காண
வெட்கத்தில் நாணமிட்டு வெட்டவெளியில்
ஓர் தமையனின் தாலாட்டுப் பாடல்...
சொட்ட சொட்ட நனைந்திட்டேன்
சொட்டும் விழியில் விழுந்திட்டேன்
சொட்டாமல் புன்னகையோ இதழோரம்
சொட்டும் அன்புரசத்தில் மகிழ்ந்திட்டேன்
சொல்லவோ அவளன்பை கவிசுவையாக
சொல்லினிக்கும் தமிழ் அமுதோடு....
மஞ்சள் வெயில் கிறங்கடிக்க
மதிமயக்கும் மாலையிலே
மண்வாசம் அடித்ததோ
மங்கையவள் தமையன் அவன்
மங்கா ஒளிவீசி வந்தானோ..
தமக்கையோ காத்திருக்க
தனியே பார்த்திருக்க
தமையனவன் வந்தானோ
தங்கையை தாலாட்டி சீராட்ட...
கண் உறங்கு கயல்விழியே
கண் இருட்டி வெளி இருண்டு
கருமை நிறமானதோ வெ (...)
வாடுமோ பயிரும் வளம் குன்றுமோ
வாடுமோ தினமும் உண்டி சிறுக்குமோ
வாடுமோ உடலும் நோவொடு தினமும்
வாடுமோ உயிரும் ஈசன் உளப்பற்றிருந்தாலே...
ஒவ்வொரு காலடியும் தூரமிட
ஓயாமல் துரத்துகிறேன்
ஒரடி எழ ஈரடி சறுக்க
ஓய்வில்லாமல் பயணிக்கிறேன்….
நீரெல்லாம் வற்றியும் கண்ணில்
நீர்த்துவிட வில்லை
நீங்காத நினைவுகளும்
நீளும் கனவுகளும்…
தேடும் ஒவ்வொரு நொடியும்
தேடுகிறேன் உயிர்துடிப்பை
தொடும் தூரம் வந்தும்
தொட்டுவிடும் கனவில் பயணிக்கிறேன்…
இருள் சூழ்ந்து மறைத்தாலும்
இயலாமையில் நொறுங்காமல்
இருள் கலைய எழுகிறது சூரியன்
இருளே இல்லாமல் வெற்றிநடையிடுகிறது….
இதுவும் கடந்து போகும்
இன்னமும் வந்து போகும்
இதுவே முடிவல்ல
இயற்கை தந்த பாடமிது…
நம்பிக்கையோடு போராடு
நலமாகும் வாழ்வும் தான்
நயமான உழைப்பில்
நகர்ந்து வரும் வெற்றியும்