நம்பிக்கையோடு போராடு
ஒவ்வொரு காலடியும் தூரமிட
ஓயாமல் துரத்துகிறேன்
ஒரடி எழ ஈரடி சறுக்க
ஓய்வில்லாமல் பயணிக்கிறேன்….
நீரெல்லாம் வற்றியும் கண்ணில்
நீர்த்துவிட வில்லை
நீங்காத நினைவுகளும்
நீளும் கனவுகளும்…
தேடும் ஒவ்வொரு நொடியும்
தேடுகிறேன் உயிர்துடிப்பை
தொடும் தூரம் வந்தும்
தொட்டுவிடும் கனவில் பயணிக்கிறேன்…
இருள் சூழ்ந்து மறைத்தாலும்
இயலாமையில் நொறுங்காமல்
இருள் கலைய எழுகிறது சூரியன்
இருளே இல்லாமல் வெற்றிநடையிடுகிறது….
இதுவும் கடந்து போகும்
இன்னமும் வந்து போகும்
இதுவே முடிவல்ல
இயற்கை தந்த பாடமிது…
நம்பிக்கையோடு போராடு
நலமாகும் வாழ்வும் தான்
நயமான உழைப்பில்
நகர்ந்து வரும் வெற்றியும் தான்
நம் அருகிலே….
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
