தாரா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தாரா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 288 |
புள்ளி | : 29 |
விடுதலையான இரவில்
கைகள் கைதிகளாயின
"பிரிக்காத மிட்டாயும்"
"பிரித்த மிட்டாயின் காகிதமும்"
கூடுதல் சுவையாகும்
பிடித்தவர்கள் கொடுத்தால்😍
விடுமுறை முடிந்தது
என்ற ஏமாற்றத்துடன்
மாறுதலே வாழ்க்கை
என தேத்திக்கொண்டே ஏறினேன் பேருந்து....
பேருந்தில் ஏறிய
எல்லோரும் எடுத்தார்கள்
பயணச்சீட்டு
நானும் எடுத்தேன்...
எடுத்து முடித்த பின்பு
யாரோ டாட்டா சொல்வது போல் ஒரு சப்தம்
ஜன்னல் வழியாக
எட்டிப் பார்க்கையில்
தெரிய வந்தது "நன்றி மீண்டும் வருக" என நீல பலகை கத்தியது அக்கறையுடன்...
அக்கறையாக அந்த
இரவு பொழுதை
பலர் உறக்கத்திலே உறைந்தனர்
சிலர் அலைபேசியில் அலற்றினர்
நானும் ஓட்டுனரும் மட்டும் பொறுப்பாய் ஓட்டினோம்...
ஓட்டுனர் வண்டியை ஓட்டினார்
நான் என் நினைவுகளை ஓட்டினேன்...
ஓட்டிய நினைவோடு
ஜன்னலிடம் அனுமதி கேட்டு
நீண்ட நாள் வெறும்
கண்ணால் மட்டும்
கண்ட காதலனை அடைய
வீட்டை விட்டு வெளியேறினால்
காதலி💞
- கிளையிலிருந்து விடுதலையான இலைகள்
புண்ணியம் செய்த
வாடகை வீட்டுகாரர்கள்
அவள் காதில் குடியேரிய
ஜிமிக்கி கம்மல் 💞
என்னவனே♥️
என் மேல் உனக்கு காதல்
என்றால்
குறுஞ்செய்தி மூலம்
சொல்லி விடாதே
கடிதத்தின் மூலம்
சொல்லி அனுப்பு
ஏனென்றால்
உன் கையை தொட தான்
பாக்கியம் கிட்டவில்லை
உன் கையால் எழுதிய
வார்த்தைகளை தொடும்
பாக்கியமாவது கிட்டட்டும்♥️