ismail218 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ismail218
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jun-2022
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
ismail218 செய்திகள்
ismail218 - எண்ணம் (public)
08-Jun-2022 7:11 pm

இதயம் எனும் கோவிலை

இருட்டறை ஆக்கி போனாய்
இந்த உலகிற்கு தெரியாது
இந்த பிறவி உனக்கு என்று
இருப்பினும் காத்திருப்பேன்
இதயம் எனும் கோவிலில்
 இறைவியாக உன்
இருப்பிடம் கேட்டு......

மேலும்

ismail218 - எண்ணம் (public)
08-Jun-2022 7:09 pm

காத்திருக்கிறேன்.....

கனவில் நீ வர கண்ணை மூடி
காத்திருந்தேன்...
நினைவில் நீ வர நித்தமும்
காத்திருந்தேன்...
உணர்வில் நீ வர உனக்குள்
காத்திருந்தேன்...
காற்றில் நீ வருவாய் என
வழியெங்கும்
காத்திருந்தேன்....
காத்திருந்து 
காத்திருந்து
காலங்கள் போனது மட்டும் தான் மிச்சம்..
காத்திருக்கிறேன் கல்லரையிலும் உன் 
காலடி என் கல்லறையில் என்றாவது ஒரு நாள் விழும் என்ற எண்ணத்துடன்......

மேலும்

ismail218 - எண்ணம் (public)
08-Jun-2022 7:06 pm

......பெண்ணே பார்த்து போ......
பிணம் தின்னும் கழுகுகள் போல
உடல் தின்னும் மனிதர்கள் வாழும்
கொடிய காலம் இது 
...பெண்ணே பார்த்து போ...
நன்றியுடன் இருக்கும் நாய்கள் கூட
வெறி வந்தால் மட்டுமே கடிக்கும்
ஆனால் நன்றியுடன் இருப்பதை போல
நடித்து கடித்து குதறும் நாய்கள் வாழும் 
உலகம் இது
...பெண்ணே பார்த்து போ...
உதவி என்று போனால்
உயிருடன் புதைக்கும் காலம் இது
...பெண்ணே பார்த்து போ...
காதல் என்று சொல்லி
கற்பை பறிக்கும் காலம் இது
...பெண்ணே பார்த்து போ...
வேலைக்கு செல்லும் இடத்தில் கூட
வேட்டையாடும் மிருகங்கள் வாழும்
வேடிக்கையான உலகம் இது
...பெண்ணே பார்த்து போ...
காதலுக்கு ஜாதி பார்க்கும் கூட்டம்
காமத்திற்கு ஜாதி பார்க்காமல்
கற்பை சூறையாடும்
கயவர்கள் வாழும் உலகம் இது
...பெண்ணே பார்த்து போ...
இதயத்தை கொடுப்பேன் என்று
இடையை கிள்ளும்
இருளர்கள் வாழும் 
இக்கட்டான காலம் இது
...பெண்ணே பார்த்து போ...
கோவிலில் கூட 
கோவணம் அவுக்கும்
கோரர்கள் வாழும் காலம் இது
...பெண்ணே பார்த்து போ...
இறந்த உடலில் கூட 
இன்பம் தேடும் 
இரக்கமற்ற அரக்கர்கள் வாழும் 
உலகம் இது
...பெண்ணே பார்த்து போ...
பெண்களை போற்றுவோம் எனக்கூறி
பெண்களின் உடலில் 
உயிரணுக்களை ஏற்றும்
பெட்டையர்கள் வாழும் உலகம் இது
...பெண்ணே பார்த்து போ...
கனவுகள் காணும் பெண்களின்
கழுத்தை அருக்கும்
காமுகர்கள் வாழும் உலகம் இது
...பெண்ணே பார்த்து போ...
அனுமதி இன்றி ஆடைகளை களைக்கும்
ஆண்மகன்கள் வாழும் உலகம் இது
...பெண்ணே பார்த்து போ...
சேலை கட்டி வைத்தால் 
செங்கல்லை கூட விட்டு வைக்காத
செல்லா மனிதர்கள் வாழும்
உலகம் இது
...பெண்ணே பார்த்து போ...
கொரோனாவை விட வேகமாய் கற்பை
கொள்ளை அடிக்கும்
கொல்லைகாரர்கள் வாழும் உலகம் இது
...பெண்ணே பார்த்து போ..
அன்னையாய் ' சகோதரியாய்' காதலியாய்
மனைவியாய் ' பாட்டியாய் ' வாழும் 
காலங்களில் கூட நிம்மதி 
காணாமல் போகும்
...பெண்ணே பார்த்து போ...
கண்ணில் பண்பையும் 
கையில் உயிரையும் வைத்து
வெளி செல்லும் 
...பெண்ணே பார்த்து போ...
வெளி சென்று வீடு திரும்பும் வரை
உயிரை பணையம் வைக்கும் அனைத்து 
  பெண்மணிகளுக்கும் உங்கள் இனிய நண்பன் இஸ்மாயில் சமர்ப்பிக்கும் 
சமர்ப்பணம்.....
ஏதும் தவறாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்.... நன்றி.....
by:- ismail....

மேலும்

கருத்துகள்

மேலே